தாங்க முடியல்லே....இது தாங்க உண்மை...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக், ஹிஜாஸ் மைந்தன். (????????????.)[02 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20688
நகரில் அவ்வப்போது நடக்கின்ற விழாக்கள், வைபவங்கள், நிகழ்ச்சிகள், மார்க்க உபந்நியாசங்கள் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் ஒலி பெருக்கியின் மூலம் உச்சகட்ட சப்தங்களால் செவிப்பறையை கிழித்து செல்வது பழகிப் போன வழமையாகி போனது.
பரவலாக விசேஷ வைபவங்கள் மற்றும் விழாக்கள் நடைபெறும் போது, அதன் நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்ப, ஒலி பெருக்கியை ஊர் முழுக்க தெருக்களில் கட்டி ஒலிபரப்பி பலருக்கும் இடைஞ்சல் ஏற்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது. எந்த தெருவுக்குள் போனாலும் ஒலிப்பெருக்கியின் ஓசைதான் கேட்கின்றது. அந்த அளவிற்கு தெருவுக்கு தெரு ஒலி பெருக்கி குழாய்களைப் பொறுத்தியுள்ளனர். இது ரமழான் காலங்களிலும் தொடர்ந்து வருகின்றது.
இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்கள் முன்பெல்லாம் மேகத்தில் ஏற்படும் இடி ஓசையை தான் அதிகம் கேட்டுள்ளனர். இந்த ஓசையால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் நம் முன்னோர்கள் இடி, மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டார்கள்.
அன்று இடி ஓசையால் பாதிக்கப்பட்ட மனிதன் இன்று அதைவிட பல மடங்கு சப்தத்தைக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக காதின் உட்புறச் சவ்வானது மிக மெல்லிய படலமாகும். மனிதனின் காதானது குறைந்த அளவு சப்தத்தையே உள்வாங்கிக் கொள்ளும்.
இப்படி மென்மையான ஒலியை மட்டும் வாங்கும் காதுகளுக்கு அதிபயங்கரமான ஒலிகளை எந்நேரமும் கேட்க நேருவதால் காதுகளின் செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் சக்தியை இழக்கச் செய்கின்றது.
ஒரு மனிதனின் காதுகளில் உள்வாங்கும் ஒலியின் அளவு கூடும் போது உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு எரிச்சல், கோபம் ஆகியவை ஏற்படுவதால் தான் உச்சபாஷினியை பயன்படுத்த உயர் நீதிமன்றமே தடை செய்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு பரீட்சை நடந்து வரும் நிலையில் அவர்கள் வீட்டில் வைத்து பாடம் படிப்பதற்கும், டியூஷன் நடத்துவதற்கும் பெரும் இடைஞ்சலாகவே உள்ளது.
அதைவிடவும் மோசமானது, வீடுகளின் ஜன்னல் அருகே ஒலி பெருக்கி குழாய்களைக் கட்டுவதால் அதன் சத்தம் சுகவீனர்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் நிலையும் உள்ளது.
நம் நகரில் தொடர்ந்து பல மணி நேரங்கள் ஓயாது ஒலிக்கும் ஒலி பெருக்கியின் ஓசைதான் பிரச்சனைக்குரியது. பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்தச் செயலையும் நாம் ஆதரிக்கக் கூடாது,
பொதுமக்களின் நலன் கருதி இச்செயலை நாம் இயன்ற அளவிற்கு தவிர்த்துக் கொள்வதுடன், குறிப்பாக மாணவர்களுக்கு பரீட்சை நடந்து வரும் காலங்களில் இது போன்ற நிகச்சிகளை பள்ளிக்குள், அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மட்டும் கேட்கும் விதத்தில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் (பாக்ஸ்) களைப் பயன்படுத்தி பிறருக்கு சிரமம் ஏற்படாடமல் பார்த்துக் கொள்வது நலம். இது எந்த (கொள்கை) கருத்து வேறுபாடுகள் சார்ந்த விஷயமாக எடுத்துக் கொள்ளாமல் முழுக்க முழுக்க ஊர் மக்களின் நலன் கருதிய பதிவாகவே இதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறருக்கு துன்பம் இழைப்பதை இஸ்லாம் ஒரு போதும் வலியுறுத்துவதில்லை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross