Re:ஒலிபெருக்கியின் - ஒலி மாச... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (????????? )[02 April 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20690
அருமையான கட்டுரை. அசத்தி விட்டீர்கள் மாமா.
முதலில் ஜனாப் ரஹ்மத்துல்லாஹ் ஹாஜியார் அவர்களை இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டு உள்ளேன். பல வருடங்களாக அவர்கள் இதனின் தீமையையும், பாதிப்பையையும் எதிர்த்து வருகிறார்கள். கமெண்ட்ஸ் பதிவில் அதிகமாக இந்த ஒலி மாசை பற்றி எழுதியவரும் இவர்கள் தான். ஆனால் யாருடைய காதிலும் விழவே இல்லை.
நாங்கள் எதுவும் எழுதினால் உடனே சாயம் பூச பலர் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். மஹ்மூது மாமா, ரஹ்மத்துல்லாஹ் ஹாஜி போன்ற நடுநிலையாளர்கள் எழுதியுள்ளதால் இதற்க்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்புகிறோம்..இன்ஷா அல்லாஹ்.
பசங்க பரிட்சைக்காக கவலையுடனும், அக்கறையுடனும், பரபப்புடன் இரவில் படித்துக்கொண்டு இருப்பார்கள். அந்த நேரம் குழாய் ஸ்பீக்கர் டொக்..டொக் என்று கத்தவும், பசங்க விரக்தியுடன் புத்தங்களை பொத்...பொத்..தென்று மூடவும் சரியாக இருக்கும். அப்புறம் இக்ரா என்று கல்விக்கு பாடுபட்டு என்ன பயன்.
வயோதிகர்கள், நோயாளிகளுக்கு உதவி செய்து, பின்பு தலைமாட்டில் குழாய் ஸ்பீக்கரை வைத்து அவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிப்பதை விட..... என்னத்தை எழுத...கொடுமையோ கொடுமை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross