சிந்திக்கத் தூண்டும் சிறந்ததோர் ஆக்கம் இது...!!! posted byM.N.L.முஹம்மது ரஃபீக். (????????????.)[24 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20727
இக் கட்டுரையாளரின் பார்வையில் ஒரு தொலைநோக்குச் சிந்தனை தான் ஊடுருவிச் செல்கின்றது.
ஒரு சமூகத்திற்கு எதிராகப் போர்தொடுக்கும் போது அச் சமுக்கத்தின் ஆணிவேராகத் திகழும் அருங்காட்சியகங்களை சூரையாடுவதும், நூலகங்களை தீக்கிரையாக்குவதும் காலாகாலமாக கபட புத்தியள்ள தீய ஆட்சியாளர்களால் செய்யப்பட்டு வரும் ஈனத்தனமான செயல்! சமூகத்தின் கலாச்சாரக் கால் சுவடுகள் தெரிவது இலக்கண இலக்கியங்களில் தான்.எனவேதாம் இக்கயவர்கள் கங்கனம் கட்டிக்கொண்டு அழித்தொழிக்க ஆயத்தமாகின்றனர். போர்க்காலங்களில் அறிவியல் வல்லுநர்களையும், ஆன்மீகத் தலைவர்களயும் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை!
சிட்டு குருவிக் கட்டுரையாளரின் ஆதங்கம் சிட்டு குருவிக்கு மட்டுமல்ல மாறாக புத்தகமும், வாசித்தலும் புதையுண்டு போவதைக் கண்டு நெகிழ்ந்துள்ளார். வளரும் தலைமுறையினர் நவீன காலத்தின் குருந்தகட்டிலும், மைக்ரோச் சிப்புகளிலும் நம் பண்டைய இலக்கியம், பண்பாட்டு காவியம் ஆகியவற்றைப் பதிவு செய்து பாதுகாத்து வந்த போதிலும் இனி வரும் தலைமுறையினருக்கு வாசித்தலின் வாடையே இல்லமல் போய்விடுமோ என்ற அச்சமே மேலோங்குகின்றது.
எனவே,
வாசிக்கும் பழக்கத்தை நேசிப்போம்! சுவாசிப்பை போலவே வாசிப்போம்!
வாசிப்பும் சுவாசிப்பும் தொடரட்டும்! வாழ்வினில் இன்பம் படரட்டும்!
தொடர்ந்து இது போன்ற நல்ல பல ஆக்கங்களை சகோதரர்.எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் தந்துதவ வேண்டுகிறேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross