Re:ஏப்ரல் 23: உலக புத்தக தின... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[24 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20728
நல்ல கட்டுரை. இலங்கையில் யாழ்ப்பாணம் நூலகம் எரிக்கப்பட்டது சமீபத்தில் அல்ல.1983 ல்.காமினி திஸ்ஸ நாயகா ,லலித் அதுலத் முதலி போன்ற மந்திரிகளின் முன்னிலையிலே அந்த அற்புதமான நூலகம் கொளுத்தப்பட்டது. ஏராளமான அரியவகை நூல்கள்.பழம் ஓலைச்சுவடிகள் கிடைத்தற்கரிய அரிய ஆவணங்கள் எல்லாம் ஒரு நொடியில் தீக்கிரையாயின.
சிங்களவரிடம் இனி நியாயம் கிடைக்காது என்று தமிழ் அறிவு ஜீவிகளும் ஓரளவு படித்த பொது மக்களும் உணர்ந்தது அதற்க்கு பிறகுதான். இது குறித்து "ஒரு லட்சம் புத்தகங்கள் "என்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா அற்புதமான கதை ஒன்றும் எழுதியுள்ளார்.
ஹிட்லரும் அவனது சமூக ஜனநாயக கட்சி குண்டர்கள் மூலம் பெர்லினில் உள்ள "டயஸ் "என்ற பாராளுமன்றத்தையும் அதிலுள்ள பல்லாயிரம் புத்தகங்களையும் கொளுத்தினான். அதுவே பின்பு இராக்கிலும் தொடர்ந்தது.
ஆக்கிரமிப்பாளர்கள் எவராயினும் அவர்கள் முதலில் கை வைப்பது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டின் கலாச்சாரம் பண்பாடு மொழி போன்றவற்றில்தான். இவைகளை வீழ்த்தினால் எந்த நாட்டையும் சுலபத்தில் வீழ்த்தி விடலாம். புத்தகங்களும் இவற்றில் அடங்கும்.
தமிழ் நாட்டுக்கு புத்தகம் (அச்சட்ட வடிவில்)அறிமுகமானது போர்ச்சுக்கீசியர்கள் காலத்தில்தான். "தம்புரான் வணக்கம் "என்ற புத்தகமே முதல் தமிழ் புத்தகம். இதை 1765 ல் போர்ச்சக்கீசியர்கள் வெளியிட்டார்கள். போர்ச்சுக்கீசியரான சீகன் பால்கு என்பவர் தரங்கம்பாடியில் ஒரு அச்சுக்கூடத்தை நிறுவினார். பெரும்பாலும் கிறிஸ்தவ மத போதனை நூற்களே அச்சிடப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் கிட்டத்தட்ட 1812 வரை இந்தியர்களுக்கு அச்சிடும் உரிமை கிடையாது. அதன்பிறகே உரிமை வழங்கப்பட்டது. அந்த உரிமை கிட்டிய பிறகே பழம்பெரும் தமிழ் சங்க கால நூற்கள் மள மள வென நூல்வடிவம் பெறத்துவங்கின. இது ஒரு சுருக்கமான வரலாறு. அவ்வளவுதான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross