உலக புத்தக தினம்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[24 April 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 20729
நல்லதொரு படைப்பு. எவ்வளவுதான் வலைதளத்தில் படித்தாலும், புத்தகத்தில் படிப்பதன் மூலம் கிடைக்கும் சுவையும், நமக்கு பிடித்த வரிகளை 'அடி குறியிட்டு' படிப்பதன் இன்பமும் தனிதான். இத் தனித்தன்மை வலைதளத்தில் நிச்சயமாகக் கிடைக்காது.
புத்தக வாசிப்பில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு எவ்வளவு நேரம் தான் படித்தாலும் அலுப்புத் தட்டாது. வலைதளங்கள்... நாட்டு நடப்பை, செய்திகளை, சுருக்கமான விசயங்களை அறிந்து கொள்வதற்க்கு ஒகே. நீண்ட நேரம் வலைதளங்களில் படிப்பது ஒரு சிலருக்கும் வேண்டுமென்றால் 'ஒகே' வாக இருக்கலாம் ஆனால் பெரும்பாலானோருக்கு அது கொஞ்ச நேரத்தில் 'போர்' அடித்து விடும்.
உளவியல் வல்லுனர்கள் கூற்றுப்படி, குழந்தைகளின் மூளை வளர்ச்சியும், அறிவுத் திறனும், 'முடிவு எடுக்கும்' திறனும் அவர்கள் பேசத் தொடங்குவற்கு முன்பே, நாம் அவர்களுக்குப் புத்தகத்தை வாசித்துக் காட்டுவதன் மூலம் அதிகரிக்கும் என்கின்றனர்
'இன்றைக்கு உங்களுக்கு அறுவை சிகிச்சை' என்ற மருத்துவரிடம், 'அதை நாளைக்கு வைத்துக் கொள்ளலாமா?', ஏனென்றால் நான் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருக்கிறேன். அதை இன்று இரவுக்குள் படித்து விடுவேன். ஒரு வேளை அறுவை சிகிச்சையில்
நான் பிழைக்காமல் போய்விட்டால், என்னால் அந்த புத்தகத்தை படிக்க முடியாமல் போய்விடும். அதற்கு என்மனம்
இடம் தரவில்லை என்றாராம் அறிஞர் அண்ணா என்று எங்கேயோ படித்த ஞாபகம். அந்த அளவுக்கு புத்தகத்தில் மனம் லயித்தவர்கள் மனதை பறிகொடுத்த பல அறிஞர்கள் மாமேதைகள் உண்டு.
என்னுடைய திருமணத்தின் போது, பலர் தங்களால் முடிந்த அன்பளிப்புகளை தந்தாலும்... ஒருவர் மட்டும் புத்தகத்தை அன்பளிப்பாக தந்தார். அவர் தந்த அந்த அன்பளிப்பு மட்டும், அவரின் ஞாபகமா என் புக் செல்ஃபில் இருக்கிறது.
நமது இல்லங்களில் நடக்கும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு பணத்தை 'தண்ணி' போல செலவு செய்யும் நாம், அதில் 'கொஞ்சத்தை' நல்ல புத்தகங்களை நிகழ்ச்சிக்கு வருகை புரிபவர்களுக்கு அன்பளிப்பாக கொடுப்பதும்.. அது போன்று புதுமண தம்பதியருக்கு (ஒரு வேளை புத்தகத்தை மட்டும் அன்பளிப்பாக கொடுத்தால் கஞ்சன் அல்லது உங்களுக்கு 'கவுரவ குறைச்சல்' என்று எண்ணினால், நீங்கள் கொடுக்கும் அன்பளிப்புடன் 'இலவச இணைப்பாக' ஒரு புத்தகத்தையும் கொடுங்கள்) அல்லது யாருக்காவது அன்பளிப்பாக ஏதாவது கொடுக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு பிடித்தமான புத்தங்களை அன்பளிப்பாக தருவது... வாசித்தலின் வரம்பில்லா அனுபவத்தை நமது அடுத்த தலைமுறையினருக்கு நாம் ஏற்படுத்தித்தர இயலும்.
ஒவ்வொரு புத்தகமும் நமது சிந்தனைகளின் புதிய சாளரத்தை திறந்து வைக்கிறது. அதனால் தான் என்னவோ 'மனிதரின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே’ என்றார் அறிவியல் மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross