Re:சீரியல் கில்லர்!... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[26 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20736
இன்றைய கால சூழலுக்கு ஏற்ற தரமான கட்டுரை. சினிமா பார்ப்பதையே "ஹராம்"என்று சொன்ன நமது சமூக பெரியவர்கள்.பின்னொரு காலத்தில் அதே சினிமா "சீரியல்"என்று வேறொரு வடிவம் எடுத்து ஒவ்வொரு வீட்டின் வரவேற்ப்பு அறையையும் அலங்கரிக்கும் என்று கனவு கூட கண்டிருக்க மாட்டார்கள்.
முன்பெல்லாம் திருமணமாகாத குமரிப்பெண்கள் வீட்டில் பொழுது போக்குவதற்காக "ராணி""குமுதம்"போன்ற இதழ்களை வாங்கி வாசிப்பதும் ஓய்ந்த நேரங்களில் "ரேடியோ சிலோன் "கேட்பதும் வாடிக்கை. ஒரு நியாயமான பொழுதுபோக்கான இதைக்கூட அக்கால பெரியவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
"அதென்ன....எப்போ பார்த்தாலும் ரேடியோ...புஸ்தகம் ...?"என்று அதட்டுவார்கள்.(எனது மனைவியே இந்த சங்கடங்களை ஒருபாடு அனுபவித்திருக்கிறாள்.)
ஆனால் இன்று சிறியவர்களை விடுங்கள்---பெரியவர்களே இந்த சீரியல் மோகத்தில் மிகைத்தவர்களாக இருக்கிறார்கள். ஒரு நாள் கூட இவர்கள் அதை தவற விடுவதில்லை. ஏதாவது வேலை நிமித்தம் ஒரு நாள் இவர்கள் இதை பார்க்காது போனாலோ ,அல்லது அந்த சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் மின்தடை எற்ப்பட்டாலோ இவர்கள் அடையும் சங்கடம் கொஞ்ச நஞ்சமல்ல. விடுபட்டுப்போன தொடரை யாரிடமாவது கேட்டு தெரிந்து கொள்ளும் வரையில் இவர்களுக்கு தூக்கம் வராது.
இத்தனைக்கும் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றுக்கு ஓன்று எந்த வித்தியாசமும் இருப்பதில்லை. அதே மாமியார் மருமகள் சண்டை, கொடூர சித்தி, வில்லன்களாக உருமாறும் கணவனின் தங்கை அல்லது மனைவியின் அண்ணன் அல்லது விஷமம் செய்யும் வீட்டிலுள்ள கிழடு கட்டைகள் ----இதே புளித்துப்போன பார்முலா கதைகள்தான். தலைப்பை மட்டும் எடுத்துவிட்டால் எது எந்த சீரியல் என்று யாருக்கும் தெரியாது.
மூளையை மழுங்க வைக்கும் இத்தகைய தொடர்களால் ஒரு வேளை இது போன்ற கொடுமைகளை தங்களது நிஜ வாழ்விலும் அனுபவிக்கு ம சிலருக்கு வேண்டுமானால் சற்றே ஆறுதல் கிடைக்கலாம். மற்றவர்கள் --பெரும்பாலும் பெண்கள் தங்களுக்கு உள்ளேயே ஒரு போலி உலகத்தை சிருஷ்டித்து கொண்டு மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் உண்மை.
பெண்களின் இந்த பலஹீனத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளும் இந்த சீரியல் கில்லர்கள் இதை ஜவ்வு மிட்டாய் மாதிரி 100 episode 200episode என இழுத்தடிக்கிறார்கள். ஒரு வேளை pain killar மாதிரி இதுவும் ஒரு கில்லரோ..என்னவோ...!ஆனால் இந்த கில்லரால் வலி தீராது. நோய்தான் பெருகும். இதை நம்மவர்கள் உணர்ந்தால் சரி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross