Re:சீரியல் கில்லர்!... posted byAbdul Kader S.H. (Jeddah)[26 April 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20742
நல்ல பல ஆழமான சிந்தனையோட்டத்தை இங்கே அள்ளித் தெளித்திருக்கிறார் கட்டுரை ஆசிரியர். . அவரின் ஆதங்கம் உண்மையானதே! நம் ஊரின் அனைத்து இல்லங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டி பெரும் தொல்லைகாட்சியாகவே இருந்து வருகிறது. நன்மை பயக்கும் நல்ல விஷயங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமில்லை மாறாக ஓயாத சீரியல் படம் பாட்டு இவைகளில்தான் ஆர்வம் ஊற்றெடுக்கிறது.
"சீரழிய சினிமாவை பாருங்கள்" என்ற தலைப்பிலே பெருந்தகை மர்ஹும் எஸ்.எம்.ஐதுருஸ் ஆலிம்
மௌலவி பாசில் பாக்கவி அவர்கள் ஒரு புத்தகம் வெளியிட்டார்கள். சினிமாவின் தாகம் நம் ஊரில் இல்லாத அந்த தருணத்திலே வெளியிட்டு பல மேடைகளிலே உபதேசமும் செய்து வந்தார்கள். இன்று பல இல்லங்கள் சினிமா அரங்கமாகவே மாறிவருகிறது. அதுமட்டுமில்லாமல் பெருந்தகை மர்ஹும் செய்யது ஆலிம் முப்தி அவர்கள் பெண்கள் ரோட்டுப்படிகளிலே உட்கார்ந்து அரட்டை அடிப்பதை நேரில் பார்த்து கண்டித்ததை பல முறை கண்டுள்ளேன். அன்னாரின் காலடி (செருப்பு) கட்டையின் ஓசை கேட்டதும் வெகுண்டு ஓடி வீட்டுக்குள் ஒழிந்ததையும் நான் நன்கறிவேன்.
மேலும் பெண்கள் குதிரை வண்டியில் பயணம் செய்யும் போது, ஓடக்கரை தாண்டியதும் மரப்பு மேலே சென்றுவிடும், வண்டியில் இருப்பவர் வெளியில் தெரிய திறந்தவாறே பயணம் செய்வதையும் பல மேடையில் வருத்ததுடன் உபதேசம் செய்தார்கள். இன்று இப்படி அறிஉரை கூறும் பெரியவர்கள் எங்கே? அறிஉரை கூறினாலும் அதை ஏற்று நடப்போர் எத்தனை பேர்?
தொலைக்காட்சி முன் தவம் இருப்போர் ஊண் உறக்கம் யாவும் நேரம் தவறி வாழ்கின்றனர்.
பள்ளிப்பருவத்திலே இசைகேற்ற நடனத்தை பிஞ்சி குழந்தைகளின் மனதில் பயிற்றுவித்து பதிய வைக்கின்றனர். இதனால் காயல் காலசாரம் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடுமோ! என்ற ஐயப்பாடு எழுந்துள்ளது.
கடை வீதியில் தொண்டுகள் தொலைந்து போனது. நம் ஊரின் பஜாரை சரியாக நம் கம்மாக்கள் கண்டதில்லை. இன்றோ பெண்கள் நம் முக்கிய வீதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றனர்.
இதற்கெல்லாம் நிச்சயம் சீரியலும் ஒரு பங்கு வகிக்கிறது என்றால் அது மிகையாகாது.
முன்பெல்லாம் சுபுஹு வேளையிலும், மக்ரிப் வேளையிலும், தெரு வீதிகளில் நடந்து செல்லும் போது குரான் ஓதும் சப்தம் வீட்டினுள்ளிருந்து வந்து நம் காதுகளில் விழும். இன்று அது மிகக்குறைவாகவே அறிய முடிகிறது. ஆகையால் சீரியலை சீரியசாக்கி படுக்கவைத்து நாம் இபாதத்தின் நல் வழியில் நடை பயின்று நம் ஊரின் பெருமைகளை கட்டிக்காப்போம் வல்ல அல்லாஹ் துணை செய்வானாக ஆமின்.
நல்ல சிறந்த தலைப்பில் கட்டுரை வடித்து வலைதளத்திற்கு மெருகூட்டிய அன்பு மைத்துனர் அருமை இளவல் ஹிஜாஸ் மைந்தனுக்கு பாராட்டுக்கள். தொடரட்டும் உங்கள் கட்டுரைகள். சிந்தட்டும் பேனாவின் மை. (இப்ப எங்கே பேனாவும், மையும் ) தட்டட்டும் உங்கள் கை விரல்கள்... வாழ்த்துக்கள்!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross