Re:சீரியல் கில்லர்!... posted byALS mama (Kayalpatnam)[27 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20743
அஸ்ஸலாமு அலைக்கும்,
சீரியல் கில்லர்!... எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)
சமூக ஆர்வலர். தம்பியின் தொலைகாட்சி தொடர் பார்ப்பது குறித்து கருத்து (இக்காலம் பயினி சீசன் காலம் அதிலிருந்து வரும் புட்டு என்ற ஸ்வீட்டை நியாபகபடுத்துகிறார்) புட்டு புட்டு வைக்கிறார். நான் புட்டு தின்பதில்லை காரணம் ஒரு நோய் தாக்கி உள்ளது. உங்கள் கருத்து புட்டு சுவையாக இருந்தது.
உங்கள் கட்டுரையை படித்த N.S.E மஹ்மூத் காக்கா தொலைக்காட்சி பெட்டி அது சைத்தானின் கருவி என்று வர்ணித்திருக்கிறார். எனது வீட்டில் இன்றுவரை தொலைக்காட்சி பெட்டி, தொலைபேசி, கைபேசி எதுவும் இல்லை. எனது மனைவியும் என்னுடைய கொள்கைக்கு இன்றுவரை ஒத்துப்போவதால் நாங்கள் கட்டுப்பாடுடன் இருக்க அல்லாஹு பெரும் உதவி செய்திருக்கிறான். அல்ஹம்துலில்லாஹ். எலா வசதியும் ஓரளவு அல்லாஹ் தந்திருந்தும் மேற்சொன்ன பொருளை வாங்கி வீட்டில் வைக்க இதுவரை எனது மனம் இடம்தரவில்லை.
சைத்தானின் கருவி தொலைக்காட்சி பெட்டி என்பது எப்போது உண்மையாகிறது என்றால். பாங்கு சொல்லும் போது, ஆடல் பாடல் கோவில் ஆராதனை கொட்டுமேளம் எல்லாமே நமது வீட்டில் நமது பெண்கள் தொழும் பகுதியில் அவைகள் வரும்போது அந்த சப்த அலைகள் வீடு பூராவும், முஸ்லீம் வீடுகளில் வியாபித்திருக்கிறது. நமது முஸ்லீம் வீடுகளில் சைத்தானின் கருவியான தொலைக்காட்சி பெட்டியின் கேடுகள் இவ்வளவு இருக்கும் போது முஸ்லீம் வீடுகளில் பாங்கு சொல்லும் போது அவைகள் மூடப்படாமலும், மூட கரங்கள் போகாமலும் இருந்தால் எந்த அளவு சைத்தானின் ஆதிக்கம் நம் முஸ்லீம் வீட்டிற்க்குள் வந்திருக்கிறது. இதைதான் சைத்தானின் பெட்டி என்று காக்கா கூறி இருக்கலாம்.
எழுத்தாளர், சமூக ஆர்வலர்,
ALS மாமா,
ஓவியர், ஆலோசகர் - ரஹ்மானியா பள்ளி கல்வி வளர்ச்சி குழு,
காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross