Re:சீரியல் கில்லர்!... posted byVilack SMA (Hong Shen , Siacun)[29 April 2012] IP: 119.*.*.* China | Comment Reference Number: 20744
அஸ்ஸலாமு அழைக்கும் ALS மாமா .
தங்களுடைய கருத்தை தற்போதுதான் படிக்க நேர்ந்தது , நீங்கள் இன்னும் ஒரு " புதுமையான பழமைவாதி " யாகத்தான் இருக்கிறீர்கள் . உங்கள் வீட்டில் கைப்பேசி , தொலைபேசி , தொலைகாட்சி இன்றளவும் இல்லை என்கிறீர்கள் . அது உங்களின் மனக்கட்டுப்பாட்டையே பிரதிபலிக்கின்றது . இதையெல்லாம் உங்கள் வீட்டில் வைத்துக்கொள்வதா , வேண்டாமா என்பதெல்லாம் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.
NSE மாமா அவர்களின் கருத்தை நூற்றுக்கு நூறு வரவேற்பவன் நான் . ஆனால் இந்த நவீன யுகத்தின் கண்டுபிடிப்புகளை சைத்தானின் கருவிகள் என்று வர்ணிப்பது சற்றும் பொருத்தம் இல்லாதது . எதுவொன்றிலும் ஆக்கம் , அழிவு இரண்டுமே உண்டு . நல்லதை எடுத்து , தீயதை வெறுப்போம் .
தம்பி ஹிஜாஸ் மைந்தனையும் , அவருடைய கட்டுரையையும் இந்த கணினி மூலமாகத்தானே நாமெல்லாம் அறிந்தோம் . கணினியின் பயன்களையும் பாதகங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் . இன்று வரும் செய்தித்தாள்களில் செய்திகளைவிட , ஆபாச விளம்பரங்களைத்தான் அதிகளவில் காண முடிகிறது . அதற்காக செய்தித்தாளே வாங்க மாட்டேன் , படிக்க மாட்டேன் என்று சொன்னால் எப்படி ? வானொலியை திறந்தால் முக்கல் , முனகல் பாட்டுக்கள் , வானொலியும் சைத்தான் என்று சொன்னால் , இன்று உலகை உங்களால் புறியவும் , அறியவும் முடியாது .
அரபு நாட்டின் தொலைக்காட்சியில் நாள்பூராவும் நமது புனித மக்காவை காட்டிக்கொண்டிருக்கின்றனர் . கவ்பாவில் நடக்கும் 5 வேலை தொழுகையும் நேரடி ஒலிபரப்பு செய்கின்றனர் . நேரில் சென்று கண்டுகளிக்க வசதி இல்லாதவர்கள் , சைத்தான் என்று நீங்கள் வர்ணித்த தொலைக்காட்சியின் மூலம்தான் கண்டுகளிக்கின்றனர் .
K .S . Shuhaib மச்சான் ஒரு கருத்தில் சொன்னதுபோல , போர்வாளை கொடுத்தேன் , போர் செய்ய . ஆனால் புடலங்காயை நறுக்கினால் அது யார் மீது குற்றம் ?
ஆக எதுவொன்றிலும் , நல்லது , கெட்டது இருக்கும் . நல்லதை மட்டுமே எடுப்போமே .
இவ்வளவு மனக்கட்டுப்பாட்டுடன் இருக்கும் நீங்கள் , கணினியின் மூலமாகத்தானே உங்கள் என்னத்தை பகிர்ந்துகொள்கிறீர்கள் . கணினி பெரிய சைத்தான் ஆயிற்றே ? அதற்காக , உங்கள் எண்ணங்களை " ஓலைசுவடியில் " எழுதி அனுப்புவீர்களா ?
அப்புறம் மாமா , உங்களுக்கு சுகர் வியாதி இருப்பினும் , நீங்கள் பதநீர் சாப்பிடலாம் . மருத்துவரிடம் கேளுங்கள் .
மாமா நீண்ட ஆயுளுடன் இருக்க நாம் அனைவரும் அல்லாஹ்வை வேண்டுவோமாக .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross