Re: ப்ளஸ் டூ - அடுத்தது என்ன ? posted byM Sajtih (DUBAI)[02 May 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20749
கட்டுரையாளர் ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ள
" நம்மால் இன்றுவரை ஒரு IIT, சிவில் சர்வீசஸில் ஒருவரை (?)கூட உருவாக்க முடிய வில்லை"
என்பது உண்மையில் வருத்தமளிக்கும் செய்திதான். அடிப்படையில் நமது புதிய தலைமுறைக்கு (நான் +2 முடித்த காலங்கள் உட்பட) இருக்கும் முக்கியமான பிரச்சினை "PEER PRESSURE" தான்.
எதை படிக்கவேண்டும் என்பதன் அளவுகோலே 'இதைபடித்த இவர் இன்ன வேலையில் இருக்கிறார்' என்பதும், அதைவிட 'எவ்வளவு சம்பாதிக்கிறார்' என்பதும் தான்.
உன்னோடு படித்தவன் இப்போ எப்படி இருக்கான் பாரு என்று சொல்லாத தாய்தந்தையே இல்லை எனலாம்.
+2 முடிக்கும் வரை அரை மார்க் குறைய கூட என்ற மன உலைச்சல், பரிட்சை முடித்ததும் என்ன படிக்க என்பதில் மாணவன் விருப்பமோ அல்லது கற்கும் திரனோ தகுதியோ பற்றி எந்த கவலையுமில்லாமல் இதைபடி, அதைப்படி என சொந்தங்களின் (அதிலும் படித்த சொந்தங்கள்!!) எல்லோருக்கும் அளவுகோள் யாரையாவது முன்மாதியாக எடுத்து அதையே இவர்களும் செய்யவேண்டும் என்பதில் கொடுக்கும் Pressure..
இப்படி அழுத்ததின் மேல் அழுத்தம் கொடுக்கும் சமுதாயத்தில் இது இன்னும் பல ஆண்டுகளுக்கு சாத்தியமில்லை.
சிவில் சர்வீஸ் துறைக்கு தெரிவாக மிக அவசியம் பொருமையுடன் கூடிய "நிலைபேறு" - Persistence.
கட்டுரையாளர் குறிப்பிட்டது உதாரணம் போல சாதரன வேலையில் சேர்ந்து சிவில் சர்வீஸுக்கு படிக்க நம் தலைமுறையினர் தயாராக இருக்கக்கூடும், அதை ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களும் - பேசிவைத்துள்ள பெண்ணின் / பையனின் பெற்றோர்களும் பொறுத்திருக்கும் காலம் வருமா?
இன்னும் ஒரு உறுத்தல், இன்சினியர்களும் டாக்டர்களும், தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களும் மிக குறைவாக இருந்த காலத்தில் காயலர்களில் பலரும் முதலாளிகளாக இருந்தனர்., இந்த மெற்படிப்புக்கள் பணம் சம்பாதிக்கும் எளிய வழியாக வேலை தேடுவதை உருவாக்க நம்மில் இருந்த "entrepreneurship", ஒழிந்துபோனதுடன், restructure என்னும் மறுசீரமைப்போ, recession வந்தால் எப்போ வெளியே அனுப்புவார்களோ என்ற பீதியிலேயே சராசரியாக இருப்பவர்களின் காலம் நகர்வது பலருடன் பேசினால் தெரியவரும்.
வேலை வாய்ப்பை மட்டுமே அளவுகோலாக வைத்து ஆலோசனை சொல்வதுடன், பலருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்க உதவும் வகையில், பெற்றோரின் தொழிலை சிறப்பாக செய்ய உதவும் கல்விகளை தெரிவு செய்ய ஆலோசனைகள் வழங்க்குவதும் சிறப்பானதாக அமையும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross