Re:ப்ளஸ் டூ - அடுத்தது என்ன ... posted byVilack SMA (Wu Yi , Nanhai .)[02 May 2012] IP: 14.*.*.* China | Comment Reference Number: 20750
நல்ல கட்டுரை , இரண்டு மாதங்களுக்குமுன் இதை எழுதி , என்னென்ன நுழைவுத்தேர்வுகள் மாணவர்கள் எழுதலாம் என்பதையும் சொல்லி இருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும் .
[ பொதுவாக நமது மாணவர்கள் தங்களுக்கான படிப்பைத் தேர்ந்தெடுக்க வைத்திருக்கும் அளவுகோல்… தனக்குத் தெரிந்தவர்கள் தேர்ந்தெடுத்து வெற்றி கண்ட துறையையே தனக்குமான எதிர்காலமாக நம்புவது, பெற்றோர்களின் விருப்பத்தின் பேரில் அல்லது வற்புறுத்தலின்படி ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பது அல்லது நண்பர்களை விட்டுப் பிரியாமல் இருக்க அனைவரும் ஒரே கோர்ஸில் / கல்லூரியில் சேர்வது. ] copy & paste
பொதுவாக நமதூர் மாணவர்கள் ஒருசில குறிப்பிட்ட பாடங்களையே படிக்கின்றனர் . கட்டுரை ஆசிரியர் மேலே சொன்ன காரணங்கள்தான் இதற்கும் பொருந்தும் .
petrolium refinery , mining , marine Biology , agriculture இவைகளும் கட்டுரை ஆசிரியர் சொன்னதுபோல நல்ல படிப்புகள் . இதுபோன்று இன்னும் பல உள்ளது .
எனது மகனும் கல்லூரியில் சேரும்போது , petrolium refinery , mining , marine Biology , agriculture இதுபோன்ற புதுவகையான படிப்புகளை தேர்ந்தெடுக்க வழிகாட்டினேன் . ஆனால் அவனோ , வேறு ஒரு புதிதான படிப்பில் ஆர்வம் காட்டினான் . அவனுடைய விருப்பத்திற்க்கேற்ப தரமான ஒரு பொறியியல் கல்லூரியில் அவன் விரும்பிய பாடத்தில் சேர்ந்து , நல்லபடியாக படித்துக்கொண்டிருக்கிறான் . நமதூரை சேர்ந்த இன்னொரு மாணவரும் இதே படிப்பை வேறு ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார் . ஆக , பெற்றோர்களின் வழிகாட்டுதலும் , மாணவர்களின் விருப்பமும் முக்கிய பங்காக இருக்கிறது .
மாணவர்களே , கட்டுரை ஆசிரியர் சொன்னதுபோல , உங்கள் திறமைக்கேற்ப புதிதான படிப்புகளை தேர்ந்தெடுங்கள் . அல்லாஹ் உதவியால் உங்கள் எதிர்காலம் மிகச்சிறப்பாக அமையும் .
மேலும் கட்டுரை ஆசிரியர் , மாணவர்களின் விருப்பத்தையும் , பெற்றோர்களின் வழிகாட்டுதளையும்தான் திரும்பத்திரும்ப சொல்லி இருக்கிறார் . சிறந்த கல்லூரி , பாடங்களை தேர்ந்தெடுக்க பொருத்தமான கட்டுரை .
அபுதாபி காயல் நல மன்றத்தினர் " உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி " நடத்தப்போவதாக சொன்னார்கள் . இதுவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .
இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை என்றென்றும் விரும்புபவனாக ,
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross