Re:ப்ளஸ் டூ - அடுத்தது என்ன ... posted bymackie noohuthambi (kayalpatnam)[04 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20757
மாணவர்களை மையமாக கொண்டு எழுதப்பட்ட கட்டுரை, ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு நல்ல மாற்று மருந்து
.இளம் சிறார்களை கூப்பிட்டு கேளுங்கள் நீ என்னவாக ஆசைபடுகிறாய் என்று ,உடனே டாக்டர் ஆக வேண்டும், இஞ்சினியர் ஆக வேண்டும் என்று சொல்வார்கள். அவன் மேல்நிலைப்பள்ளியில் படித்து +2 எழுதியபிறகு கேளுங்கள், நான் என்னவாக வேண்டும் எனபது எனக்கே புரியவில்லை. வாப்பா டாக்டருக்கு படி என்பார், உம்மா இஞ்சினியருக்கு படி என்பாள், நண்பர்கள் ஐடி படி என்பார்கள். இவன் குழம்பி போய் இருப்பான். இந்த நிலையை மாற்ற ஆசிரியர் அவர்களின் கட்டுரை நல்ல பயன் தரும்.
நாங்கள் படிக்கும் காலத்தில் எங்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்கவில்லை. இப்போது போட்டி போட்டுக்கொண்டு கல்விக்கு உதவி செய்பவர்கள் முன்வருகிறார்கள்.அதே போல் கடல்போல் கல்வியில் பல துறைகள் இருக்கின்றன. சரியான தேர்வு செய்து அதை படிக்க மாணவர்களுக்கு வழி காட்டும் நிறுவனங்கள் இல்லை. கட்டுரை ஆசிரியர் அதை பற்றியும் சிந்தித்து இந்த சமுதாயம் ஆவன செய்ய வலியுறுத்துங்கள். தொலைக்காட்சிகளில் ஆபாச படங்கள், அலைபேசியில் அவை ஊடுருவி இளைஞர்கள் மனங்களில் சபலங்களை ஏற்படுத்துவதும் ஒரு காரணம்
. ஒரு கையில் மதுவும் மறு கையில் மாதுவும் சேர்ந்து இருக்கையில் என் ஜீவன் பிரிய வேண்டும். இல்லை என்றால்.........இல்லை என்றால் என்ன வாழ்க்கை நீ வாழ்ந்தாய் என்று எனைபடைத்த இறைவன் எனைகேட்பான் என்று கவிஞர்கள் காம வெறியை ஊட்டி வளர்த்தார்கள். இப்போது அது குறுந்தகடுகளில் வெளியாகி தனியாக உட்கார்ந்து பார்த்து ரசித்து அதை அனுபவிக்க தூண்டும் நிலையை மாணவ மாணவிகளிடம் ஏற்படுத்தியுள்ளது. சினிமா, டாஸ்மாக் போன்ற இரண்டு போதை வஸ்துக்களுக்கும் அரசின் அங்கீகாரம் இருக்கிறது, அதை அவர்கள் வருமானம் தரும் அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாக கருதுவதால் அதை தடை செய்யமாட்டார்கள். இந்த இரண்டும் சர்வ சாதாரணமாக உள்ள இடத்தில மூன்றாவது......மாது...வெகு சுலபமாக ஊடுருவிவிடும். இவற்றை தடுக்க ஒரே வழி சிறிய வயதிலேயே மார்க்க கல்வியை அவர்கள் உள்ளத்தில் நிறைத்து விடவேண்டும்.இதை எல்லா பெற்றோர்களும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.டாக்டராக, இஞ்சிநீராக வருவதை விட என் பிள்ளை முஸ்லிமாக இறை அச்சம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் நினைத்து இளைய தலைமுறையை வளர்த்தால், இன்ஷா அல்லாஹ் அவர்கள் நல்ல சந்ததிகளாக நம் கண் முன்னாலேயே உயர்ந்து நிற்பதை நாம் காண முடியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross