Re:தேங்கா மூடி எழுத்தாளர்களுக்கு மத்தியில், posted byOMER ANAS (DOHA QATAR.)[24 May 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 20785
ஆஹா! பேஸ் பேஸ் ! என்ன அருமையாக உனது எழுத்துமேடையில், உடல் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு முக்கியம் என்பதை ஆணித்தரமான கருத்தாக சொல்லி விட்டா!பாராட்டுகிறோம்!
சில தேங்கா மூடி கட்டுரை போல் இல்லாமல்,மறக்க முடியாத பழைய நினைவுகளை நினைவு படுத்தி,மக்களின் ஆரோக்கியத்திற்கு,
வரும் காலங்களில் விளையாட்டு அதிலும் காயலர்களின் விளையாட்டு பகல் கனா போல் களைந்து போய்விடுமோ என்றும் ஆதங்கம் பட்டுள்ளாய்!
ஆனாலும்,இதற்க்கு தாய்மார்கள் மட்டும் காரணமில்லை சகோதரா.
அந்த காலத்தில் பிள்ளை படிக்கவில்லை என்றால்இருக்கவே இருக்கு என்று தோல் மண்டிக்கோ, இல்லை என்றால் கல் வியாபாரம், அரபு நாடு என்று எதாவது ஒரு இடத்திற்கு அனுப்பி விடுவார்கள்.இப்ப அது சாத்தியதை இல்லை.
அரபு நாடுகளில் கொத்தடிமைகளாக வாழும் நம் புருசன்மார் போல் இல்லாமல்,நம் புள்ளிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிக் கூட பாட புத்தகங்களை சுமக்கும் தன் பிள்ளையின் கஷ்டத்தினை மன வேதனையுடன் பார்க்கும் தாய் நாளை நம் பிள்ளை உயர்ந்த நிலையில் வாழ வேண்டும் என்று நினைக்கின்றாள்!இதில் தப்பேதும் இல்லை. இவர்களை பொதி சுமக்க வைக்கும் பாட சாளைகளே இதற்க்கு முதல் காரண கர்த்தா!
அன்று கைத்தொழில் பாடம் இருந்தது.இன்று இல்லை. இருந்தாலும் அது ஃ பெசல் கிளாசாக மாறி விட்டது ! விளையாட்டு நேரம் இருந்தது.இன்றும் இருக்குகிறது. K S C யிலோ U S C யிலோ ஆடு மாடுகளை கொண்டு விடுவதைப் போல் கொஞ்ச நேரம் விட்டு விட்டு கூட்டிப் போகும் காட்ச்சிகளை கண் கூடாக காண்கிறோம். மாறவேண்டும் என்றால், பள்ளி நிர்வாகம் முதன் பள்ளி ஆசிரியர் வரை குழந்தைகள் இடத்தில் பரிவு காட்டி வீர விளையாட்டிற்கும் இடை இடையே ஊக்கம் அளிக்க வேண்டும்.ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross