Re:இன்னலுறும் இறையில்லப் பணி... posted byVilack SMA (Saigon , Vietnam)[31 July 2012] IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 20845
மாமாவின் கட்டுரை இறை இல்லப்பணியாலர்களின் வாழ்க்கை தரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாய் இருக்கிறது . உண்மை நிலையம் அதுதான் . மாமா சொன்னதுபோல் , ஏதோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ளவர்கள்தான் மிகவும் வசதியாக உள்ளனர் . பெரும்பாலானோர் மிகவும் கஷ்ட ஜீவனத்தில்தான் உள்ளனர் .
இறை இல்லப்பணியாலர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அந்தந்த ஜமாத் வாசிகள் பொறுப்பேற்கலாம் . இன்றைய விலைவாசிக்கு தகுந்த சம்பளத்தை கொடுக்கலாம் . பள்ளியின் அருகிலேயே , ஏதாவது சிறிய அளவில் தொழில் செய்ய பள்ளியின்மூலம் உதவலாம் . அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளலாம் ,
பொதுவாக இந்த வேலைக்கு , கஷ்டப்பட்ட நிலையில் உள்ளவர்கள்தான் வருகின்றனர் . அவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது அந்தந்த ஜமாத்தாரின் கடமையாகவே கருத வேண்டும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross