Re:இன்னலுறும் இறையில்லப் பணி... posted bymackie noohuthambi (kayalpatnam)[31 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20846
அருமையாக சொன்னீர்கள். எனது தந்தை மக்கி ஆலிம் அவர்களை இலங்கையில் கண்டியில் தைக்கா பள்ளியில் கதீபாக இமாமாக பணியாற்ற ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். அதில் பள்ளிவாசல் லைட் மின்விசிறி இவற்றையும் கவனிக்கும் பொறுப்பை கூடுதலாக ஏற்றுக்கொள்ள சொன்னார்கள். எனது வாப்பா, வாருவோர் போவோர் செருப்பும் காணாமல் போகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்பதையும் எழுதுங்கள் என்று சொன்னார்களாம். அதோடு நிற்காமல் உங்கள் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுகிறேன். நான் ஒரு நிபந்தனை விதிக்கிறேன். இங்கு ஐந்து முத்தவல்லிகள் இருக்கிறீர்கள் இவர்களில் யாராவது ஒருவர் ஐந்து வேளை ஜமாத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ன சம்மதமா என்று கேட்டார்களாம். நாங்கள்தான் நிபந்தனை போடுவோம் நீங்கள் எங்களை கேள்வி கேட்கக்கூடாது என்று அவர்கள் சொல்ல, அப்படியானால் அதற்கு வேறு ஆளை பாருங்கள் என்று சொல்லி வெளி ஏறி விட்டார்களாம் இந்த துணிச்சல் இப்போதுள்ள இமாம்களுக்கு வருமா, பொருளாதாரம் ஒரு புறம். தங்கள் மரியாதைகளை விட்டுக்கொடுத்து வாழ்க்கை நடத்தும் உலமாக்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள். உலமாக்கள் தங்கள் உரிமைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். தங்கள் கடமைகளை தட்டி கழிக்கிறார்கள். கிறிஸ்தவ மதத்தில் அல்லது மாற்று மதத்தில் அவர்களுக்கு சமுதாயம் எவ்வளவு கவ்ரவம் கொடுக்கிறது என்பதை எண்ணிபாற்கும்போது வேதனையாக இருக்கிறது. குறைந்த சம்பளத்தில் எல்லா வேலையும் பார்க்கக்கூடிய ஒரு கஷ்டப்பட்ட ஆள் கிடைத்தால் அந்த பள்ளிவாசல் முத்தவல்லிக்கு கொண்டாட்டம் தான், அவர் கெட்டிக்காரர் என்றும் போற்றப்படுகிறார். இந்த நிலை மாற வேண்டுமானால் உலமாக்கள் சபை ஊர் தோறும் ஏற்படுத்தப்பட வேண்டும். ஜமாதுல் உலமா இதற்கான வியூகம் வகுக்க வேண்டும். சம்பளங்களை நிர்ணயிப்பதில் அவர்கள் தலையிட வேண்டும். ஏன் நமதூர் காயல்நல மன்றங்கள் இதில் அக்கறை காட்டலாம். கல்விக்கு மட்டுமல்ல, இறை இல்லக்கொடைவள்ளல்களை அணுகி அவர்களின் அனுசரணையும் ஆலோசனையும் பெறலாம். கட்டுரை ஆசிரியர் அதற்கான முதல் கோட்டை வரைந்தால், அதற்கான ரோட்டை மற்றவர்கள் போடுவார்கள். புனித ரமலான் அதற்கு அஸ்திவாரம் இடட்டும் . உங்கள் குரல் நாலா பக்கமும் ஒலிக்கட்டும். உங்கள் கட்டுரை இனையதலத்தில் மட்டும் இருந்து விடாமல் ஒவ்வொரு இதய தளத்திலும் இல்லங்களிலும் நல்ல உள்ளங்களிலும் ஒலிக்கட்டும். பணம் இருப்பவர்களா கொடுக்கிறார்கள், மனம் இருப்பவர்களே கொடுக்கிறார்கள். என்றாலும் அகல் விளக்குக்கும் தூண்டுகோல் தேவை. அதை செய்திருக்கிறீர்கள் உங்கள் எண்ணம் வீண்போகாது. வியூகம் வகுத்து நீங்கள் பதவி வகிக்கும் இக்ரா மூலமே இதை முன்னெடுத்து செய்யலாம் அது ஒரு சாதாரண சங்கமல்ல காயல்பட்டினம் மக்களின் சங்கமம். .. வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross