காலம் கடந்த நினைவுகளும்,நிகழ்வுகளும் ... posted byM.N.L.முஹம்மது ரஃபீக். ஹிஜாஸ்மைந்தன். (????????????)[26 February 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 20930
ஒரு எழுத்தாளன் எந்த சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றானோ எந்த சூழ்நிலையைத் தழுவிதான் அவனது எழுத்தும்,ஆக்கமும் இருக்கும் என்பதற்கு முன்னால் அதிகாரி ஐ.பி.எஸ். அவர்களும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்திருக்கின்றார்.அவர் காவல் துறையில் பணியாற்றி வந்ததால் அதன் நெடியும்,கம்பீரமும்,ஸ்டேட்மெண்ட்ஸும் (வாக்குமூலம்) அதில் பளிச்சிடுகின்றது.மனிதர் நமதூரை நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றார்.துப்பாக்கி முனயைப் பார்த்தே பழகிப் போன ஓர் முரட்டு உருவத்திற்குள் பேனா முனையும் ஒளிந்திருப்பது ஆச்சரியமாகவே உள்ளது.
அன்று,அமரர்- எம்.ஜி.ஆர்.அவர்கள் மட்டும் கண் அசைத்திருந்தால் ரணகளமாகியிருக்கும் காயல்பட்டணம்.அவரின் சமயேஜிதமான முடிவு அந்த நேரத்தில் சரியானதாகவே இருந்தது. தவறு அவர் மேல் இல்லை.உள்ளூர் ரத்தத்தின் ரத்தம் தான் தவறான வழியைக் காட்டி, அமரர்.எம்.ஜி.ஆர்.அவர்களின் சரித்திரத்தில் இப்படி ஓர் களங்கத்தை ஏற்படுத்தி விட்டார்.இது நம் காயலுக்கும் பொருந்தும். என்ன? காலம் கடந்த நினைவுகளும்,நிகழ்வுகளும் இப்போதும் நம் நெஞ்சை வருடத்தான் செய்கின்றது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross