அன்பு சகோதரர் ஹசனின் கட்டுரை நூற்றுக்கு நூறு உண்மை .இப்படி பட்ட சமூக சீர்கேடுகள் குறிப்பாக நமது ஊரின் கலாச்சாரங்கள் அடியோடு குறைந்து விட்டது மற்றுமொரு காரணம்.காயல் பட்டினத்தில் நுழைந்த உடன் தலையிலே தொப்பி அணிந்து செல்லும் வழக்கம்.தொப்பி இல்லாமல் தெருவில் செல்லும் போது பெரியவர்கள் சதுக்கை (சங்கங்கள் )களில் அமர்ந்து தம்பி எந்த ஊரு யாரை பார்க்க செல்கிறீர்கள் என்று விசாரித்து அனுப்புவார்கள். தெரிந்த பிள்ளைகளாக இருந்தால் என்ன தொப்பி இல்லாமல் போகிறாய் என கண்டித்து அனுப்புவார்கள் .
2 இதற்கு முந்திய கட்டுரையில் அன்பு மச்சான் ரபீக் குறிப்பிட்டதை போல் மாணவ செல்வங்கள் இனிய மாலை பொழுதினில் விளையாடி மக்ரிப் பாங்கின் சப்தம் கேட்ட உடன் விளையாட்டை நிறுத்தி மக்ரிப் தொழுது விட்டு வீட்டுக்கு வந்து திரு மறை குர்ஆனை ஓதி அதற்கு பிறகு பள்ளி பாடங்களை படித்து கொண்டிருப்பார்கள்.இந்த நடைமுறைகளை பின்பற்றாத மாணவ மாணவியர்களுக்கு இரவு உணவு மறுக்கப்படும் .மக்ரிப் தொழுகை முடிந்த வுடன் தெருவுக்குள் நுழைந்தால் வீடு தோறும் சாம்பிராணி, பத்தி வாசனை கமகமக்கும். எல்லா வீடுகளிலும் குர்ஆனை ஓதுவது ,சலவாதுகள், திக்ரு போன்ற நல்ல அமல்கள் நடைபெற்றுகொண்டிருக்கும் .இப்படி பட்ட நடைமுறைகள் ஒழிந்து போனதினால் ஊரில் முஸீபதுகள் பெருகி மன நிம்மதி இழந்து செல்வ செழிப்பில் இருந்தாலும் மனசஞ்சலன்களில் பீடிகபட்டு இருப்போர் எத்தனை பேர் என்பதை பட்டியல் போட்டு விடலாம் .
3. மார்க்க கல்வி ஈடுபட்டு விட்டது மற்றுமொரு காரணம் .பள்ளிக்கூடங்களின் விடுமுறை நாட்கள் நமது ஊரின் வழக்கப்படி வெள்ளிகிழமை, மற்றும் சண்டே ஆகிய நாட்களில் விடுமுறை விடுவார்கள் .அந்த நாட்களில் சில மணி நேரம் மார்க்க கல்
விக்காக நமது மாணவ செல்வங்கள் செல்வது வழக்கம். தற்போது புனித ஜும்ஆ தினத்தில் பள்ளிகூடங்கள் வைத்து மாணவ சமூதாயங்கள் மார்க்க கல்வி கற்க முடியாமலும் ,குளித்தும் குளிக்காமலும் வேர்க்க விருவிருக்க பள்ளிக்கு வந்து கொத்பா தெளிவுரையை கூட அறிந்து கொள்ள முடியாமல் தொழுது விட்டு விருடென சென்று விடுகிறார்கள் . இன்னும் சில மாணவர்களோ களைப்பின் காரணமாக புனித ஜும்ஆ தொழுகையை கூட விட்டு விடுகிறார்கள். நமது முன்னோர்கள் பேணி பாதுகாத்த கலாச்சாரங்கள் மீண்டும் துளிர் விட வேண்டும்.அப்போது தான் நமது மாணவ சமுதாயம் முன்னேறும். காயலின் கலாச்சாரம் பேணி பாதுகாபோம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross