Re:சமூக மாற்றத்தில் சிக்கித்... posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[07 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 21051
தம்பி ஹசன் அவர்களின் ஆதங்கத்தின் சாராம்சத்தில் நம் அனைவக்ருக்கும் பங்குண்டு.அவர் எடுத்து வைக்கும் உதாரணத்தில் வேண்டுமானால் சில விபரங்களை மாற்றலாமே தவிர,
அவரின் ஆழமான,கவலையான கருத்துக்கள் காயலர்கலாகிய நம்மில் பலபேருக்கு படிப்பினை தரக்கூடிய நல்லுபதேசமாக நினைத்து நம் பிள்ளைகளை நல்ல வழிக்கு கொண்டுசெல்லும் பாதையை தேர்ந்தடுக்க வேண்டும்!
கம்ப்யூட்டர்,மொபைல் பொன்றவற்றால்தான் 100 % பிள்ளைகள் கெடுகிறது என்பதை முழுவதும் ஏற்கமுடியாது, பலபிள்ளைகளின் வெற்றிக்கு வித்தூண்டியதும் இந்த சாதனங்களே.
ஆகவே பெற்றோர்களின் வளர்ப்பு இதில் மிக மிக முக்கியம்,
தம்பி ஹசன் உங்கள் அறிவுரையில் மார்க்க விஷியத்தில் கூடுதல் ஈடுபாடு இருக்கவேண்டும் என்ற வலியுறத்தலை காணவில்லை. நம் புனித மார்க்கத்தை ஒருவன் முறையாக பேணினாலே போதும் அவனுக்கு அனைத்து ஒழுக்கமும் உயர்வான கல்விஞானமும் ஒருங்கே ஓடோடி தேடிவரும்.
அடுத்து, சென்னையில் நம்மூர் சகோதரர் ஒருவரை பார்த்தேன்.காலையில் 6 மணிக்கு ஒவ்வொரு கடையாக பிஸ்கட் சப்பளை பண்ணுபவர் இரவு 10 மணிக்குதான் ரூமுக்கு திரும்புகிறார் அவ்வளவு கஷ்ட்டப்பட்டு தன் குடும்பத்தையும் தன் பிள்ளைகளையும் படிக்கவைத்து காப்பாற்றுகிறார்.
கஷ்டபடுபவர்கள் அரபு நாட்டில் மட்டும்தான் இருக்கிறார்கள் என்ற சிந்தாந்தத்தை சற்று மாற்றுங்கள். நம்மில் சிலர் எந்த கட்டுரை எழுதினாலும்,எந்த மேடையில் பேசினாலும் அரபு நாட்டைத்தான் குறிவைத்து காரணமாகவும், உதாரணமாகவும் குறிக்கிறார்கள். தயவு செய்து அந்த வழக்கத்தை கைவிடுங்கள்
நம்மூர் சகோதரர்கள் உலகமெங்கும் பரவி இருக்கிறார்கள், அவர்கள் எல்லோருக்கும் அப்பாற்பட்டவர்களா அரபு நாட்டில் பணிபுரியும் அன்பு காயலர்கள்?.
அரபில் வசிக்கும் நம்மூர் வாசிகள் நம்மூரை எவ்வளவு நேசிக்கிறார்கள் தெரியுமா?அந்த அன்புள்ளங்களின் நிலைமையையும், அவர்களின் வேலையையும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் பல இதயமற்றவர்களின் இன்சொல்லை
என் செவிகளில் கேட்டதால் தான் என்னுடைய இந்த கருத்தை பதிவு செய்துள்ளேனே தவிர தனிப்பட்ட எவரையும் குறிப்பிடவில்லை.
அலலாஹ் அனைத்தையும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross