Re:சமூக மாற்றத்தில் சிக்கித்... posted bySalai.Mohamed Mohideen (USA)[09 June 2012] IP: 76.*.*.* United States | Comment Reference Number: 21052
ஒரு ப்ராஜெக்ட் ஸ்டேடஸ் ரிப்போர்ட் போன்று புள்ளி விபரங்களுடன் தரப்பட்டுள்ள நல்லதொரு கட்டுரை. இது போன்ற முயற்சியை நண்பர் செய்யத் ஹசன் போன முறையும் எடுத்து அது செய்தியாக வந்த ஞாபகம் உள்ளது. Tabular ரிபோர்ட்டை விட 'லைன் சார்ட்' எல்லோருக்கும் எளிதாக புரியும் படியாக உள்ளது.
பொத்தாம் பொதுவாக எல்லோரும் கைகாட்டுவது இன்டர்நெட், டிவி, அலைபேசிகள் தான். இவைகளில் எனக்கும் மாற்று கருத்துக்கள் உள்ளன. அவைகளை விரிவாக இன்னொரு சந்தர்ப்பத்தில் பதிகின்றேன். ஷுஐப் காக்கா சொன்னது போல, தவிர்க்க இயலாத பொருட்களாகிவிட்ட இவைகளை தாண்டிதான் நம் சமூகம் முன்னேற வேண்டும். அதற்கான வழிதேடல்களே இப்பிரச்சனைக்கு (சமூக மாற்றத்தில் சிக்கித்தவிக்கும் மாணவர்கள்) பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.
என்னுடன் அறுபது வயது இளைஞர் (இது போன்ற பெரியவர்களை young man / லேடி என்று தான் இங்கு அழைப்பார்கள்) பாட்மின்ட்டன் விளையாட வருகிறார். ஒரு அரை மணிநேரம் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடினால் தான், தன் மனம் ரிலாக்ஸ் ஆகி அவ்வயதிலும் சுறு சுறுப்பு கிடைக்கிறது என்கின்றார். அவ்வயதிலே அவருக்கே அது சுறு சுறுப்பை தருகிறதென்றால் மாணவ பருவத்தில் அதை விட பல மடங்கு சுறு சுறுப்பை தரும். அளவோடு குறுகிய நேரத்திற்க்குள் விளையாடி முடிக்க முடியுமென்றால் !!
"அரபு நாட்டில் படும் கஷ்டங்களை சொல்லி" - தன் தாய் நாட்டில் இது போன்று ்நாம் கஷ்டபட்டாலும், அந்நிய மண்ணில் அடிமையாய் மனைவி மக்களை பல வருடங்கள் பிரிந்து வியர்வையுடனும் நம்மவர்கள் படும் கஷ்டத்தினால், அரபு நாட்டை பொதுவாக நாம் இப்படி குறிப்பிடுவதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் இருக்கிறது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross