Re:கழிவுகளைக் களஞ்சியமாக்குவ... posted byசாளை பஷீர் (சதுக்கைத்தெரு,காயல்பட்டினம்)[10 June 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 21055
தனது அரசுப்பணியையும் தாண்டி சூழலியல் ஆர்வலராக தன்னை வெளிப்படுத்திய பொன் வேல் ராஜ் அவர்களுக்கு நன்றி!.
குப்பைகள் குறைப்பை எளிதாகவும்,லாபகரமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் நடைமுறைப்படுத்த முடியும் என்பதை கட்டுரையாளர் தனது எளிய நடையில் சிறப்பாக தெரிவித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்த பல வழிமுறைகளில் மாடித்தோட்டமும் ,காய்கறித்தோட்டமும் அடங்கும்.
நாம் நம் இணைய தளம் வாயிலாக மாடித்தோட்ட பயிற்சிக்கு ஏற்பாடு செய்து அது வெற்றிகரமாக நடந்ததை வாசகர்கள் அறிவீர்கள்.
இதில் வருந்தத்தக்க விடயம் என்னவென்றால் மிகுந்த நேர,பொருள் செலவில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் ஒரு தடவையோடு நிற்கின்றது.
இதை தொடராக நடத்தும்போதுதான் நமதூரில் நாம் எதிர்பார்க்கும் சூழலியல் மாற்றத்தைக்காண வியலும்.
இந்த மாடித்தோட்டம் /காய்கறித்தோட்ட பயிற்சியை தொடர்ச்சியாக நமதூர் வாசிகளுக்கு கிடைக்கச்செய்வதற்கு ஊரில் வசிக்கக்கூடிய ஒரு ஒருங்கிணைப்பாளர் தேவை.
அப்படி சூழலியலில் ஆர்வமுள்ள ஆட்கள் இதற்கு முன் வரும் பட்சத்தில் அவர்களுக்கான ஆலோசனைகளையும் ,திட்டங்களையும் நான் தருகின்றேன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross