நிகழ்காலம் - காயலின் வளமான வருங்காலத்தை எழுதட்டும்!! posted bySalai.Mohamed Mohideen (USA)[06 August 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 21088
நிகழ்காலம் - காயலின் வளமான வருங்காலத்தை எழுதட்டும்!! இங்கே சகோதரர்கள் ஆதங்கபட்டு குறிப்பிட்டதுள்ளது போல, சமீப காலத்தில் உருவான ஊடக 'கருத்து சுதந்திரம்' என்ற பெயரில் காயலின் கண்ணியமும் சகோதரத்துவமும் கடைவிரித்து கேள்விக் குறியாக்கபட்டு விடாமல், உங்களின் (ஊடகங்களுக்கே உரித்தான) வழமையான வரைமுறை விதிகளில் வாசகர்களின் சமூக ஆர்வலர்களின் ஆரோக்கியமான மற்றும் வளமான நல்ல பல கருத்துக்கள் சிந்தனைகள் அனுபவங்கள் மனதிற்க்கும் அறிவிற்க்கும் இதம் தரும் தென்றலாய் வீசட்டும்.
ஆளும் வர்க்கத்தின் ஜால்ரா கூட்டங்களின் சூழ்ச்சி சுறுக்கு பைக்குள், சில சில்லரைகளுக்கு சுருங்கி விடாமல்... ஒட்டு மொத்த அடிமட்ட காயலின் ஒரே (உன்னத) வாய்சாக வான் ஓங்கி ஒலிக்கட்டும் !!
இணையதளத்தை பயன்படுத்துபவர்கள் படிப்பவர்கள் மட்டும் அறிவு மற்றும் சமூக விழிப்புணர்ச்சி பெற்றுவிட்டால் போதாது... ஊரில் உள்ள அனைத்து தர மக்களின் கரங்களில் இவ்விதழ்கள் தவழ்ந்து, அவர்களின் அறிவு மற்றும் சமூகப்பசிக்கு அருமருந்தாக, அவர்களின் உணர்வு மற்றும் எழத்து/ கலைத்திறனை 'நிகழ்காலம்' வெளிக்கொணரட்டும்.
'நிகழ்காலம்' தரமான படைப்புகளுடன் இதழாக வெளிவருவது காலத்தின் அவசியமே !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross