Re:...ஆலிம் அவர்கள் உரை posted bymackie noohuthambi (kayalpatnam)[19 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21343
ஆலிம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.
தங்களின் உரை தொழுகை, மனித நேயம், சிறந்த பண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைந்திருப்பதை இணைய தளத்தில் செவியுற்றேன்.
அஸ்ஸாம் மாநிலத்தில் பர்மாவிலே இஸ்லாமிய உயிர்கள் தீக்கிரயாக்க படுவதை நீங்கள் சொன்னபோது அடி வயிற்றில் அமிலம் சுரந்தது. அஸ்ஸாம் நமது நாட்டில் உள்ள ஒரு மாநிலம். சுதந்திரம் பெற்று 66 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பெருமைப்பட்டு பட்டொளி வீசி பறக்கும் பாரத மணிக்கொடியை பறக்கவிட்டு நான்கு நாட்கள்தான் ஆகிறது. இந்த நாட்டின் துணை ஜனாதிபதியாக ஒரு முஸ்லிம் இருக்கிறார் என்று பெருமை பட்டுக்கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு கொடூரம் நடந்து கொண்டிருக்கும்போது நாட்டின் பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார். ஜனாதிபதி துணை ஜனாதிபதிதான் என்ன செய்து கொண்டிருக்கிறார்.
ஒரு ஜனநாயாக நாட்டில் நடக்கும் படுகொலையை பற்றி எந்த அரசியல் கட்சிகளும் வாய் திறக்கவில்லை எங்கோ ஒரு நாட்டில் தமிழர்கள் உரிமைக்காக இங்கே மாநாடு நடத்துகிறார்கள்.
தங்களின் பெருநாள் உரையையும் உங்கள் ஆதங்கத்தையும் ஒரு குறுந்தகட்டில் பதிவு செய்து அதை உடனே சம்பந்தப்பட்ட பிரதமர் அலுவகலதுக்கு அனுப்பி, பெருநாள் தீர்மானமாக,காயல்பட்டின மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாக கண்டன அறிக்கையாக அனுப்பி வைக்கும்படி இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களை வேண்டிக்கொள்கிறேன்.
ஆலிம் அவர்கள் தனது உரையை கண கச்சிதமாக ஆற்றியதற்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். வயது ஏற ஏற பக்குவங்கள் வருகின்றதை பார்க்க முடிகிறது . பொறுமை, கண்ணியம் அதில் கலந்து ஆலிம் அவர்களின் உரைக்கு மெருகேற்றுகிறது. அல்ஹம்து லில்லாஹ்.
காய்தல் உவத்தல் இன்றி அமைந்துள்ள உங்களின் கண்ணியமான பெருநாள் உரை எல்லோரும் கேட்டு பயன்பெற தக்கது. தொடரட்டும் உங்கள் பணி, பாணி. ஈத் முபாரக்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross