செய்தி: நோன்புப் பெருநாள் 1433: உலக கா.ந.மன்றத்தினருடன் இணைந்து கத்தர் - துபை - ரியாத் கா.ந.மன்றங்கள் நடத்திய நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல்! நகர்மன்றத் தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உணர்வுபூர்வமான உள்ளம்களிப்புறும் உன்னத நிகழ்ச்சி! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yenbu)[28 August 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21544
ஓரிரு நாளைக்கு முன்னாள் நம்மூரில் நடுவீதியில் நடந்த நிகழ்ச்சியால் மனசொர்வுற்ற நம் சகோதரர்களுக்கு,
உண்மையான ஒற்றுமையின் உறைவிட விழாவாகிய இந்த காட்சியை காணும் அனைவர்களின் அன்புள்ளமும் அணையுடைத்த வெள்ளமாய் பாய்கிறது
அல்ஹம்துலில்லாஹ்!
50 ஆயிரம் அடிக்கு மேலே பறந்து அக்கரசீமையில் பொருள் தேட செல்லும் புண்ணியவான்களாகிய காயல் கண்மணிகள் தன் குடும்பத்தார்களுக்கு மட்டுமின்றி, நம் மண்ணின் மைந்தர்களாகிய ஏழை எழியோர், நோய் நொடியுடையோர், ஏழை மாணவ பருவங்களுக்கு வாழ்வழி என்று வல்லநாயகனின் வாக்குறுதியாகிய "வறியவர்களுக்கு உதவுங்கள்" என்ற உத்தம வாக்கின் உதாரணபுருசர்களாக வெளிநாட்டில் வாழ்ந்து,
இன்று ஊருக்கு வருகைபுரிந்துள்ள வனப்புடைய மாணிக்கங்களே!
உங்களின் உண்மையான உள்நோக்கம் வறியவர்களுக்கு உதவவேண்டும் என்பதுமட்டுமல்ல, நம்மூர் மக்கள்
ஒற்றுமை என்ற கைற்றை பற்றிபிடித்து,
ஒருதாய் மக்களாக உண்மை உணர்வுடன்வாழ வேண்டும் என்ற வைர எண்ணத்தில் வலம் வரும் உங்களை ,
கொள்கையை காட்டி, தனிப்பட்ட கூட்டமொன்று மார்க்கமெனும் மாயை போர்வையை வீசி, வேருபடவைக்கும் சில வீணர்களின் வலையில் வீழ்ந்துவிடாமல், காயல்நகர மக்கள் அனைவரும் எங்கள் அன்புக்கு பாத்திரமானவர்கள் என்ற உங்கள் ஆலமர உறுதியின் அத்தாட்சிதான் இந்த அகம்மகிலும் பெருமையைகுறிய பெருநாள் ஒன்றுகூடல்!
இந்த காட்சியை பார்க்கும் எங்களுக்கு உணர்சி மிகுதியால் வாழ்த்த வார்த்தை வரவில்லை, காரணம் இந்த இனிய நிகழ்ச்சியில் நகரமன்ற தலைவியுடன் அத்தனை அருமை நகரமன்ற உறுபினர்களும் தங்கள் அன்பொழுகும் முகமலர்ச்சியால் மலர்ந்திருக்கும் மாட்சிமை மிகுந்த இந்த காட்சிக்காகத்தான் கடல் கடந்து வாழும் காயளர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள்!அக்கனவு இதோ நினைவலையாக நீச்சல் அடித்து கொண்டிருக்கிறது.
வர முடியாத இரு உறுப்பினர்களும் தங்களின் உளம் மிகுந்த வாழ்த்து செய்தியை அனுப்பியது மேலும் ஒரு மகுத்துவ முன்னுதாரணமே!
எல்லாம் வல்ல அல்லாஹ இப்படிப்பட்ட உண்மையான ஒற்றுமை நிகழ்வை நம் ஊரில் நிறைய நடக்கும்படி செய்து, அதற்கு துணை நிற்போருக்கு தூணாகவும், அதற்கு வினையாய் நிற்போருக்கு, அவர்களின் மனதிலுள்ள வினையை விட்டொழித்து, வேறுபட்ட எண்ணத்திலிருந்து ஒற்றுமையின் எண்ணத்திற்கு மாற்றிவிடு யா அல்லாஹ!
நீ அறியாதது ஒன்றும் இல்லை!
அல்லாஹ அனைத்தையும் அறிந்தவன் !
ஊர் ஒற்றுமையே உயிர் மூச்சாய் வாழத்துடிபவர்களில் ஒருவன்,
முஹம்மது ஆதம் சுல்தான்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross