RE ..ஆச்சரியம் ஆனால் உண்மை! posted byOMER ANAS (DOHA QATAR.)[28 August 2012] IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21545
ஆக, மின் மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பது தவறு இல்லை.
ஆனால் வரம்பு மீறாதீர்கள். உங்களுக்கு குடிப்பதற்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
குளிக்க, பாத்திரம் கழுவ, ---- கழுவ என்று கீழே உள்ள தொட்டியை நிறைத்து, மொட்டை மாடியில் உள்ள தொட்டியை நிறைத்து, தோட்டத்தில் உள்ள மரம் செடிகளுக்கு குடிநீரை பாய்ச்சி கொடுமை பண்ணுகிறீர்களே.. இதுதான் தவறு. சில வீட்டில் நல்ல தண்ணீரை கிணற்றில் விடும் அவலமும் நடக்கின்றது. இது மாதிரியான செயல்கள்தான் வரம்பு மீறுதல் என்பது. அல்லாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.
**** நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.****
சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்!
தம்பி நீங்களா திருட்டுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?
ஆச்சரியமாக இருக்குகிறது.
**** நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுவோரை நேசிப்பதில்லை.****
நீங்கள் மட்டும் மீறலாமா தம்பி?
ஒரு ஹதீதிலாவது திருடுவதை ஊக்கப்படுத்தி (அது அனா பைசா என்றாலும்) நம்மை படைத்த இறைவன் எங்காவது ஒரு வசனமாவது இறக்கி உள்ளானா? வார்த்தைக்கு வார்த்தை இறை வசனங்களை சுட்டிக்காட்டும் நீங்களா தம்பி திருட்டுக்கு வக்காலத்து வாங்கி இருக்கிறீர்கள்?
உதாரணத்துக்கு என்று உங்களின் வாதத்தை வைத்தாலும்,
ஒரு குறிப்பிட்ட வங்கியில் உள்ளே புகுந்து கொள்ளை அடிப்பவன் இன்றைய பசிக்கு தேவையான காசை மட்டுமா திருடுவான்?
யோசிக்க வேண்டிய விஷயம் இது!
நீங்கள் யாருக்கு இதை அறிவுறுத்த வந்தீர்களோ எனக்கு தெரியாது. உண்மையில் யார் மோட்டார் போட்டு திருடினானும் ஹராம்தான், அவன் ஹராமிதான்!
Moderator: Comment edited!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross