தொலைந்து போன 'நம்பிக்கை' posted bySalai.Mohamed Mohideen (USA)[04 September 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 21834
தொடர் வெளிநடப்புகளை பார்க்கும் போது எவருக்குமே மக்களை வாட்டி எடுக்கும் குடிநீர் பிரச்சனை, குப்பை கூளமாய் காட்சியளிக்கும் நமதூரை பற்றி அக்கறையில்லை. இதற்க்கு இளம்ரத்தங்களும் (கையை ஆட்டி உரக்க பேசுவதில்?), மார்க்கம் பேசும் தொப்பி மூசாக்களும், கலாச்சாரம் பேசும் கண்மணிகளும் & நகர் மன்ற தலைமையும் கூட விதிவிலக்கல்ல.
நமது நகர்மன்ற சீர்குலைவுக்கு பிள்ளையார் சுழி போட்டதே 'துணைத்தலைவர்' தேர்தல் தான். பெரும்பாலான உறுப்பினர்கள் 'லட்சங்களை' அன்பளிப்பாக வாங்கி தேர்தலுக்கு முன் கூறிய 'லட்சியங்களை' காற்றில் பறக்க விட்டு 'அதிகார வர்க்கத்துக்கு' 'இடைத்தரகர்கள்' மூலம் 'அடிமை சாசனம்' எழுதித்தந்துள்ளார்கள் என்று பரபரப்பாக அன்று பரவலாக பேசப்பட்ட இக்குற்ற சாற்று மற்றும் 'ஆடியோ உரையாடல்' உண்மையில்லை என்றால், அன்றைக்கே நம் உறுப்பினர்கள் 'இறைவன் மீது ஆணையிட்டு' தன்னிலை விளக்கம் தந்திருக்க வேண்டும். குற்றமுள்ள நெஞ்சு அன்று குறுகுறுத்ததோ என்றே நினைக்க தோன்றுகின்றது.
அன்று 'அமைதி' காத்ததன் விளைவு... தலைவிக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கு கூட உறுப்பினர்கள் (ஒரு சிலரை தவிர) மீதுள்ள 'நம்பிக்கை' என்ற அஸ்திவாரம் சுக்குநூறாகி போனது. அதன் விளைவே நியாய ஊடகங்களும் பொதுமக்களும் உங்களுக்கு எதிரியாக தெரிகின்றார்கள்.
கஸ்டமர்கள் (பொதுமக்கள்) மூலம் பணியாளன் மீது கடை முதலாளிக்கு 'சந்தேகம்' என்று வந்து விட்டால் அவனுடைய நடவடிக்கைகளை அவர் (தலைமை பொறுப்பிலுள்ளவர்கள்)
'கண்கொத்தி பாம்பாக' கண்காணிப்பது இயல்பே.... தொலைந்து போன 'நம்பிக்கை' திரும்ப வரும் வரை !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross