களரியும் கலோரியும் !! posted bySalai.Mohamed Mohideen (USA)[07 September 2012] IP: 205.*.*.* United States | Comment Reference Number: 21950
நல்லதொரு கட்டுரை. உணவுப் பிரியனாய் அந்நிய தேசத்து உணவுகளைத் (ஹலால் ரெஸ்ட்டாரன்ட்) தேடித் திரிந்து புசித்தாலும் நம்மூர் களறி சாப்பாட்டுக்கு நிகர் எதுவுமே இல்லையென்பது உண்மைதான்.
எவ்வுணவும் உடலுக்கு நலம்... 'தன்னிலை' அறிந்து அளவோடு, தவிர்க்க வேண்டிய நேரத்தில் / பருவத்தில் தவிர்த்து, அவ்வுணவின் மூலம் பெற்ற கலோரியை முறையாக உடற் பயிற்சியின் மூலம் 'பர்ன் /சமன்' பண்ணத் தெரிந்திருந்தால்!!
கல்யாண விருந்த பொறத்தவரை எவரும் ஆற அமர நொறுங்க தின்று கொண்டிருப்பதில்லை. காரணம் போடு சோறு, கத்திரிக்காய் & புளியாணம் எல்லாம் 'இரண்டாம் ரௌன்ட்டில்' பந்தி மாறி போய்விடும்.
முஸ்லிம்கள் வீட்டு திருமணம் என்றாலே 'பிரியாணி' என்று ஆசையுடன் வருவோருக்கு நமது களரி உணவு, அட என்னடா இவனுங்க... வெறும் கறியும் சோறும் ரசமும் தரானுங்கன்னு ஒரு சிறு ஏமாற்றமே.
விளக்கு காக்கா குறிப்பிட்டதுள்ளது போல, திருமண விருந்தை பொறுத்த வரை ஒவ்வொருவரும் தத்தமது சம அந்தஸ்த்து உள்ளவர்களுடன் ஒன்றாக உக்காந்து உண்பது தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதற்க்கு காயலும் விதிவிலக்கல்ல. அதனை சம்பந்திக்கு ஒப்பிடுவது மிகையே.
களரி (திருமண) விருந்தில் நடந்த ஒரு கொடுமை... ஏழை (அடாப்பில் இல்லாதவர்) என்பதற்க்காக ஒரு வயதான சகோதரர் திருமண வீட்டுக்காரரால் (அவரும் ஒரு முதியவர் என்பது வேற விஷயம்) எல்லோர் முன்னிலையிலும் அவமான & தனிமை (சிங்கிள் சகன்.. ஒரு சட்டி கரி கத்திரிக்காயுடன்) படுத்த பட்டார். இது நடந்தது என்னுடைய பள்ளிப் பருவத்தில் என்றாலும் கூட, அன்று அப்பெரியவருக்கு ஏற்பட்ட அவமானத்தை 'ஒரு சக மனிதனாய்' இன்றுவரை சகிக்கவும் மறக்கவும் முடியவில்லை.
விருந்துக்கு வந்த 'கெஸ்ட்' களை 'மனம்' கோணாமல் கவனிப்பதில் ஆர்வம் காட்டுகின்றோம் ஆனால் ஏழைக்கும் அதே மனம் உண்டு என்பதனை மறந்து தனிமைபடுத்து கின்றோம். சகன் (திருமண) விருந்துகள் 'சகோதரத்துவத்தை' உணர்த்தா விட்டலும் கூட பரவாயில்லை. குறைந்த பட்சம் மனித நேயத்தையாவது உணர்த்தட்டும் !!
நாம் உண்ணும் 'களரி' உணவில் எத்தனை கலோரி இருக்கின்றதென்று யாருக்காவது தெரியுமா??? அட போங்கங்க, களரி சாப்பிடும் போது கலோரியாவது குலோரியாவது என்கின்றீர்களா... அதுவும் சரிதான் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross