குடிநீர் இணைப்பா? குளிக்கும்நீர் இணைப்பா? posted byAbdul Wahid S. (Kayalpatnam.)[07 September 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 21951
குடிநீரா அல்லது குளிக்கும் நீரா? என்பதுதான் இங்கு கேள்விக்குறி.
அந்நீரை குடிநீர் என்று மட்டுமே கருதி மோட்டர் போட்டு
உறிந்தாலும் அனேகமாக எல்லோருக்கும் அது கிடைக்கும். மீதமும் இருக்கும். உதாரனத்திற்க்கு, சராசரி ஐந்து நபர்கள் இருக்கும் ஒரு வீட்டிற்கு குடிப்பதற்கும், சமையலுக்கும் சுமார் இரண்டு குடம் குடிநீர் ஒரு நாளுக்கு போதுமானது. பத்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வருவதால் இருபது குட நீர் தேவைப்படும். அது சேமிக்கப்பட வேண்டும். ஆனால் அதை குளிக்கும் நீராக பயன்படுத்தும் நோக்கத்துடன் அது (5 x 10 = 50 குளியலுக்கு)௦ சேமிக்கப்படும் போதுதான் சுயநலம் மேலோங்குகிறது.
இது குடிநீர் மட்டுமே. குளிக்கும்நீர் அல்ல. இது பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற பரந்த எண்ணம் மக்கள் மத்தியில் இருந்தால்தான் இந்த குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு வரும்.
மின்சாரம் தடை சாத்தியமல்ல. காரணம், தண்ணீர் ஒரே நேரத்தில் எல்லோர்களுக்கும் திறந்து விடப்படுவதில்லை. பகுதி பகுதியாக திறந்து விடப்படுகிறது. மின்சாரமும் அவ்வாறு அந்தந்த பகுதிகளுக்கு தடை செய்யப்படும் பட்சத்தில்தான் இந்த முறை சாத்தியமாகும். அதற்க்கு இரண்டு வாரித்தின் (குடிநீர் - முனிசிபாலிட்டி & மின்சார வாரியம்) ஒருங்கினப்புத்திறன் (coordination between the two government departments) மிகவும் அவசியம். நமது அரசாங்க வாரியங்களுக்கிடையே ஒருங்கினப்புத்திறன் எவ்வாறு இருக்கும் என்பது நம் எல்லோருக்கும் நன்றே தெரியும்.
----------------------------------
"இந்த மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது ஹராம் என்று எந்த ஜும்மாவிலாவது எந்த ஹதீத் மஜ்லிசிலாவது உலமாக்கள் சொன்னதுண்டா",
(copy & Paste from Comment Reference Number 21944)
பல முறை அல்-ஜாமிஉல் அஸ்கர் ஜும்மா மஸ்ஜிதில் மௌலவி அப்துல் மஜீத் அவர்களால் சொல்லப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross