Re:... posted byK S Muhamed shuaib (Kayalpatinam)[08 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21969
சிந்திக்கும் ஒருவர் பிறரின் சிந்தனையை தூண்டும் விதத்தில் எழுதியுள்ள சிறப்பான கட்டுரை இது.இங்குள்ள சில "தமிழ் தீவிர "அரசியல்வாதிகள் ,தங்களுக்கு பிழைக்க வேறுவழியின்றி இலங்கைத்தமிழர் பிரச்சினையை பிடித்துக்கொண்டு தொங்குகின்றனர். பிரபாகரன் இறந்தபிறகும் அவர்கள் இதை விடுவாதாக இல்லை. இலங்கையில் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள அரசால் கொல்லப்பட்டது வேதனை அளிக்கும் நிகழ்வுதான். அதை யாரும் மறுக்கவில்லை.
எனினும் அண்டை நாடான இந்திய தமிழர்களால் இதற்க்கு என்ன தீர்வு கண்டுவிட முடியும் ?
நிறைய பேர் பரிதாப பட்டார்கள். வேதனை பட்டார்கள். அவர்களால் செய்ய முடிந்தது அவ்வளவுதான். இந்திய அரசும் அதை கண்டுகொள்ளவில்லை. அன்றைய மாநில (தி.மு.க )அரசும் எதையும் கண்டு கொள்ளவில்லை. இவர்கள் போராட வேண்டுமெனில் நியாயமாக மத்திய அரசை எதிர்த்தும்,அன்றைய மாநில அரசின் முதல்வராக இருந்த கருணாநிதியை எதிர்த்துதான் போராட வேண்டும். அதை விட்டு விட்டு அப்பாவி இலங்கை யாத்திரீகர்களை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ?இல்லையெனில் இலங்கைக்கு போய் ராஜபக்சேயை எதிர்த்து போராட போகட்டும்.
நெடுமாறன், வைக்கோ, திருமாவளவன் இன்னும் இரண்டு மூன்று பெரியார் திராவிட கட்சிகள் இவைகளுக்கு வேறு வேலையே இல்லை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு,தமிழர்களுக்காய் கட்சி நடத்திக்கொண்டு இவர்கள் அல்லும் பகலும் அனவரதமும் பேசுவதும்,ஓலமிடுவதும் பிரபாகரனை பற்றியும், செத்துமாண்ட விடுதலை புலிகளைப்ப்ற்றியும்தான் (இதில் சீமானும் ஒருவர் )
இதில் என்ன ஒரு பெரிய சோகம் எனில் இன்று ஈழத்தில் தங்களின் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் எந்த ஒரு ஈழத்தமிழனும் "தனி நாடு "கேட்கவில்லை. பூமியே வீடாக, ஆகாயமே கூரையாக கொண்டு தினம் தினம் செத்து பிழைக்கும் அந்த அப்பாவிகள் தங்களை நிம்மதியாக வாழவிட்டால் பொது என்கின்றனர்.
ஆனால் இங்கு மேடையில் தினம் தினம் சிங்கநாதம்தான்
"ஈழம் அடைந்தே தீருவோம் "அடப்பாவிகளா...உங்கள் ஈழம் வரும்போது அதில் வசிக்க ஒரு தமிழன் கூட உயிரோடு மிஞ்சமாட்டாண்டா...(எழுதுகிறேன் )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross