Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[13 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22113
"மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லை" என்று சொல்வார்கள்.
முஸ்தபா கமால் அவர்களின் வாழ்வும் அப்படிதான் போல் தெரிகிறது. எனக்கு அவ்வளவு பழக்கம் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு இணைய தளங்களில் குவியும் இதய அஞ்சலிகளை பார்த்தால், கண்மணி நபிகள் நாயகம் அவர்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது.
உங்களில் ஒருவர் மறைந்து விட்டால் அவரை ஊரெல்லாம் நல்லவர் என்று புகழ்ந்து பாராட்டினால் அவர் உண்மையிலேயே நல்லவர்தான். மர்ஹூம் அவர்களின் சமுதாய சேவைகள் போற்றதகுந்தவை. தொழிலில் அவர் காட்டிய கறாரும் கனிவும் பொதுவாழ்வில் அவர் காட்டிய அக்கறையும் பொறுப்பும் அவர்களை ஓர் நல்ல இதயம்படைத்தவராக இனம் காட்டுகிறது.
அவர்கள் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற எல்லா ஏற்பாடுகளும் நடந்துகொண்டிருக்கையில் அவர்கள் மறைவு நமக்கெல்லாம் அதிர்ச்சியை தந்தாலும் அவர்கள் ஒரு ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கு தன்னை ஆளாக்கி கொண்டு இறைவனிடம் சேர்ந்துள்ளார்கள் என்றே நினைக்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் மண்ணறையை சுவன பூங்காவாக ஆக்கிவைத்து அவர்களுக்கு மேலான சொர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.
ஏற்ற மிகு மருமகனை இழந்து நிற்கும் கண்ணியத்துக்குரிய பெரியவர் பாதுல் அஸ்ஹாப் ஹாஜி அவர்களுக்கும் பாச மிக்க தந்தையை இழந்து நிற்கும் மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross