Re:... posted byM. S. sayyid Mohammd (Bangkok)[13 September 2012] IP: 61.*.*.* Thailand | Comment Reference Number: 22114
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹீ ராஜிஊன்.
ஜெய்பூர் வாழ் காயலர்களுக்கு இவர்களின் மறைவு பெரும் இழப்பான செய்தியாகும்.
நான் ஜெய்ப்பூரில் இருந்த நாட்களில் அவர்களுடன் நன்றாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. பலப் பிரச்சனைகளை மிக சாதுர்யமாக கையாண்டுள்ளார்கள்.
ஜெய்பூர் வாழ் காயலர்களின் மருத்துவம், வீட்டுக்காரர்களின் வாடகை பிரச்னை, வியாபாரம், கொடுக்கல் வாங்கல், அரசு அலுவலகம் இன்னும் காவல்துறை வரையுள்ள அனைத்து பிரச்சனைகளிலும் காயலர்கள் அணுகும் ஒரே மனிதர் முஸ்தபா காக்கா தான். இரவு பகல் பார்க்காது பிரச்னை முடியும் வரை அவர்களுக்கு வந்தது போல் நின்று பார்ப்பார்கள்.
அவர்களுக்கிருந்த பன்மொழிப் புலமையாலும், அனைவரையும் கவரும் ஆற்றலாலும் எப்பேர் பட்ட காரியமானாலும் அதை மிக எளிதாக சாதிக்கக் கூடிய
திறன் பெற்றவர்கள்.
நீடூரைச் சேர்ந்த ஒரு சகோதரும், தப்லீக் ஜமாத்தில் வந்த ஒரு நபரும் ஜெய்ப்பூரில் மரணமடைந்த நேரங்களில் அவர்கள் செய்த உதவி காயலர்களுக்கு மட்டுமல்ல யாராக இருந்தாலும் அவர் நம் சகோதரரே என எண்ணத்துடன் உதவினார்கள்.
ஒரு ஒப்பற்ற மனிதரை இழந்துள்ளோம். அல்லாஹுத்தாலா அவர்களின் பிழைகளைப் பொருத்தருள்வானாக. மேலான சுவனத்தை அளிப்பானாக. அன்னாரின் பிரிவால் வாடும் அவர்களின் குடும்பத்தினற்கு சபுரைக் கொடுப்பானாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross