செய்தி: நகர்மன்ற சமாதான முயற்சிகள் குறித்து ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்ற துணைத்தலைவர் சாளை சலீம் - காயல்பட்டணம்.காம் இணையதளத்திற்கு தந்த பதில்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நான் சொல்கின்றபடி தீர்ப்பு சொல்லுங்கள்! posted bymackie noohuthambi (kayalpatnam)[14 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22163
சகோதரர் சலீம் அவர்கள் சொல்வதை பார்த்தால் முற்கூட்டியே இரண்டு சாரார்களிடமும் சமரச குழுவினர்" நீங்கள் சொல்லும் தீர்வுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்" என்ற ஒப்புதல் வாங்காமல் சமரச முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது. சமரச முயற்சியில் ஈடுபடும் எந்த ஒரு அமைப்பும் இப்படி ஒப்புதல் வாங்கிக்கொள்வது தான் வழக்கம். நான் சொல்கிறபடி தீர்ப்பு சொல்லுங்கள் என்று எந்த நீதிமன்றத்திலும் சொல்ல முடியுமா?
பேச்சுவார்த்தையின் முடிவு திருப்தியளிக்காததால் நீங்கள் பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்று நீங்கள் தீர்ப்பு அளித்து இருப்பது எவ்வளவு மன வேதனையான விஷயம் . உலக காயல்நல மன்றங்களின் கோரிக்கைகளை தலைவரும் உறுப்பினர்களும் உதாசீனம் செய்ததை சாதரணமாக எடுத்துக்கொள்ள முடியாது.
IF YOU CANNOT SOLVE A PROBLEM, THEN YOU ARE PART OF THAT PROBLEM என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இரு சாராருமே சமரசத்துக்கு வர தயார் இல்லை. சமரசம் வரவேண்டுமானால் யாராவது ஒருவர் விட்டுக்கொடுக்க முன் வந்திருக்க வேண்டும்.
ஒரு பாலத்தில் எதிர் எதிரே வந்த ஆடுகள் நடுவிலே சந்தித்துக்கொண்டன. அந்த பக்கம் போகவேண்டுமானால் ஒரு ஆடு படுத்து அடுத்த ஆட்டுக்கு வழி கொடுக்கவேண்டும். இரண்டு ஆடுகளுமே நான் ஏன் படுக்கவேண்டும் என்று தர்க்கம் செய்ததால் வந்த விளைவு, இரண்டு ஆடுகளுமே பாலத்தில் இருந்து தவறி விழுந்து கீழே உள்ள ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டு இரண்டுமே உயிரிழந்தன.
இது எல்லோரும் இரண்டாம் வகுப்பில் படித்த கதைகள். இப்போது நமது நகர்மன்றதுக்கு நல்ல பொருத்தமான கதை. அந்த கதை முடிவுக்கு வந்தது, ஆனால் நகர்மன்றது கதை இன்னும் நான்கு ஐந்து வருடங்களுக்கு தொடரும் கன்னித்தீவு கதை ஆகிவிட்டதே....வேதனைப்படுபவர்கள் இவர்களை தேர்ந்தெடுத்த பொது மக்கள்தான்.
என்ன செய்வது, சுட்டால்தானே தெரிகிறது தொட்டால் சுடுவது நெருப்பென்று..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross