Re:... posted byM.Jahangir (kayalpatnam)[22 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22376
அன்புள்ள K.D.N.முஹம்மது லெப்பை காக்கா அவர்களே நீங்கள் உண்மையை தெரிந்து கொண்டு கேட்கின்றீர்களா? அல்லது உண்மையிலேயே தெரியாமல் கேட்கின்றீர்களா?
நான் அறியாதவர்களுக்கு பதில் தருவது இல்லை. இந்த கேள்வியை பினாமிகள் கேட்டிருந்தால் பதில் தரமாட்டேன். உங்களைப் போன்றவர்கள் என்னை தப்பாக நினைக்கக் கூடாது என்பதற்காக இங்கு பதில் தருகிறேன்.
முதலில் "பொதுமக்களின் பார்வைக்கும் முடிவுக்கும்" என்ற நோட்டீஸ் பெற்றுக் கொண்டோம் நன்றி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. உறுப்பினர்கள் பொதுமக்களுக்கு தான் அந்த நோட்டீஸை அனுப்பியது. முகவரி இல்லாத கட்சிக்கு இந்த நோட்டீஸை யாரும் அனுப்பவில்லை.
உறுப்பினர்கள் தலைவிக்கு ஒத்துழைக்கவில்லை என்று யாரேனும் குற்றம் சொல்வார்களேயானால். எந்த விசயத்தில் ஒத்துழைப்பு தரவில்லை என்று ஆதாரங்களுடன் கூற வேண்டும். மொட்டையாக அனைவருக்கும் மொட்டை அடிக்க முயற்சிக்க கூடாது.
நம் ஊரில் முன்னேற்றப் பணிகள் நடைபெறவில்லை என்றால் அதற்கு உறுப்பினர்கள் பொறுப்பா? தீர்மானம் நிறைவேற உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அவசியம் அதனை உறுப்பினர்களாகிய நாங்கள் முழுமையாக கொடுத்துவிட்டோம். அந்த தீர்மானம் செயல் வடிவம்பெற தலைவிதான் அதிகாரிகளிடம் வேலை வாங்க வேண்டும். இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்?
யார் உடைய ஆலோசனைப்படி உறுப்பினர்கள் நடக்கிறார்கள்? தைரியம் உள்ளவர்களாக இருந்தால் அந்த பெயரையும் வெளியிட்டு இருக்கலாமே?
கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாங்கள் பெறும் பணம் 600 ரூபாய். ஆனால் மாதத்தின் மீதம் உள்ள 29 நாட்களும் நகராட்சிக்கு பொதுமக்களின் வேலைக்காக பைக்கிள் செல்வதற்கு பெட்ரோல் வகைக்கு இந்த 600 ரூபாய் போதுமா? அதற்கு மேலும் நாங்கள் எங்கள் கையில் இருந்து பணத்தை செலவலித்து மக்கள் பணியை செய்து வருகிறோம். இதற்கு நம்மை படைத்த இறைவன் சாட்சி.
வீடியோ எடுத்து வெளியிட்டால் அதுமட்டும் தான் வெளிப்படையான நகராட்சியா? ஆட்டுத் தொட்டி ஏலம் எடுத்த நபரை வாபஸ் வாங்க சொல்லி நடத்தப்பட்ட நாடகத்தை ஊர் மக்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? அதனை வெளிப்படையாக சொல்லுங்கள்?
வீடியோ பதிவு செய்வதால் சட்ட சிக்கல்கள் எழும் அதனால்தான் வேண்டாம் என்கிறோம். இதுகுறித்து மேலும் விபரம் தேவைப்பட்டால் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
நகராட்சி தலைவி அவர்களை எந்த பணி செய்யவிடாமல் தடுத்தோம் என்பதை ஆதரங்களுடன் தெரிவித்தால், பொதுமக்கள் யார் பக்கம் ஞாயம் இருக்கின்றது என்று அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.
இந்த நகராட்சியில் ஒரு பணியும் நடக்கவில்லை என்று இந்த நோட்டீஸ்லேயே குறிப்பிடப்பட்டடுள்ளது. பிறகு எங்கிருந்து ஊழல் செய்யவாம்? உறுப்பினர்கள் அவரவர் வீட்டு பணியை துவங்கி அதில்தான் ஊழல் செய்ய வேண்டும். நடுநிலையாளர்களே புறிந்துகொள்ளுங்கள்.
என்னிடம் அவர்கள் எந்த தீர்மானங்களை மாற்றி எழுதினார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கின்றது, தேவைபடுபவர்கள் நேரில் சந்தித்து பெறலாம். அதனை இணையதளத்தில் தரஇயலாது.
யாருக்கும் துதிபாட, ஜால்ரா அடிக்க, நாம் ஆதிரிக்கும் ஒருவர் தவறு செய்கிறார் என்று தெரிந்து, அதனை தட்டிக்கேட்காமல் இருக்க நான் துப்புகெட்டவன் கிடையாது. தவறு யார் செய்தாலும் அதனை சுட்டிக்காட்ட தயங்குபவனும் நான் அல்ல.
தலைவியை ஆதரிக்கும் உறுப்பினர்களில் சிலரை துணைத் தலைவர் தேர்தலின் போது இந்த நோட்டீஸை வெளியிட்ட நபர்களின் நண்பர்களும், தலைவியின் ஆதரவாளர்களும் அயோக்கியர்கள் என்று சொன்னார்கள், பணம் வாங்கிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.
தற்போது அந்த உறுப்பினர்கள் தலைவியை ஆதரிப்பதால் ஊர் நலனில் அக்கறை உடையவர்கள் ஆகிவிட்டார்களா? இதை சொல்வதற்கு அவர்களுக்கு வெக்கமாக இல்லையா?
ஊருக்கு வேலைகளை செய்யவிடாமல் தடுக்கும் அராஜகப்போக்கை கையாளுபவர்களை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். ஊருக்கு நல்ல வேலைகளை செய்யும் போது யார் தடுத்தார்கள் என்று சொல்லவா? ஆதாரங்களுடன் நிருபித்தால் ராஜினாமா செய்வாரா?
ஒன்று மட்டும் நன்றாக புறிகிறது நமது நகரில் லஞ்சம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் யாராவது நகர்மன்ற தேர்தலில் நிற்க ஆசைப்பட்டால் தயவு செய்து அதனை கைவிட்டு விடுங்கள். நல்லவன் என்ற பெயர் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இந்த நன்றிகெட்ட சிலர் நம்மை கெட்டவன் என்றாவது சொல்லாமல் இருந்தால் சரி என்றாகிவிடும். இதுதான் நம் ஊரின் நிலை.
அடுத்த தேர்தலில் நிற்க வேண்டாம் என்பதுதான் என் நிலை அதனையும் மீறி நான் தேர்தலில் போட்டியிட்டால் அது சிலரின் (பொய்யர்களின்) வெற்றியை தடுப்பதற்காகத்தான் இருக்கும். நான் அதில் வெற்றி பெறுவதற்காக இருக்காது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross