Re:...பணத்தின் மீது தான் பக்தி என்றபின்... posted bymackie noohuthambi (kayalpatnam)[30 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22526
சகோதரர் மஹ்மூத் அவர்களின் ஆதங்கம் புரிகிறது. ஆலோசனைகள் வழங்கினால் போதாது அவற்றை அமுல்படுத்த சரியான, நேர்மையான,பொது நலத்தை பெரிதாகவும் தன் சொந்த நலத்தை அற்பமாகவும் நினைக்கும் உள்ளம் உடையவர்களால்தான் நீங்கள் சொல்லும் மாற்றங்களை ஏற்படுத்தமுடியும்.
" பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏதடா, பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாருமே அண்ணன் தம்பிகள் தானடா..." என்ற ஒரு பாடல் உங்களுக்கு நினைவிருக்கிறதா...ஆட்சிக்கு வருமுன் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்து உள்ளே வந்து அமைச்சரானபின் அவர்கள் செய்யும் அட்டகாசங்கள், அழிச்சாட்டியங்கள் பற்றி பத்திரிகைகளில் தினசரி படித்து வருகிறோம். ஊடகங்கள் விகிலீக்ஸ் களாக மாறி வந்து உண்மைகள் வெடித்து சிதறுவதை பார்க்கிறோம்.
நமதூரில் சமீப காலத்தில் ஏற்பட்டுள்ள ஊடக தாக்கங்கள் ..காயல்பட்டினம்.காம் என்றும். காயல்நிவ்ஸ் .காம் என்றும் காயல்டைம்ஸ்.காம் என்றும் உலா வருகின்றன. அவை தரும் வெளிப்படையான செய்திகள், சில் நமக்கு கசப்பாக இருந்தாலும் அவற்றிலுள்ள உண்மைகளை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது. ஒவ்வொரு செய்திக்கும் பல விதமான கருத்துக்கள் அபிப்பிராயங்கள் எதிர் வாதங்கள், கேள்வி பதில்கள்....அப்பப்பா....எந்த காலத்தில் இப்படி பார்க்க முடிந்தது. சுதந்திரமாக அவரவர்கள் கருத்துக்களை சொல்ல நல்ல வாய்ப்புக்கள்.....தவறு செய்வதற்கு பயப்பட வேண்டியுள்ளது.அந்த அளவுக்கு வெளிப்படையாக எல்லாம் நடந்தும்கூட, தொடர்ந்து பணத்தை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு மத்தியிலும் மாநிலத்திலும் நகரமன்ற நிர்வாகத்திலும் ஊழல்கள் சிம்மாசனத்தில் ஏறி ஆட்சி செலுத்துகிறது, என்றால், நீங்கள் நினைக்கும் சீர் திருத்தங்கள் எந்த ஜன்மத்தில் அரங்கேறும். ஒரு வேளை நீங்களே இந்த நகரமன்றத்தின் தலைவராக வந்தாலும் இதை செய்து சாதனை படைக்க முடியாது. இங்கே தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை நிர்வாக அதிகாரிக்குதான் வானளாவிய அதிகாரம் உண்டு.HE CAN PUT YOUR SUGGESTIONS IN THE WASTE PAPER BASKET WITH A STROKE OF HIS PEN.
இதற்கிடையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் ஒத்துழையாமை இயக்கம்....NO CHANCE MY DEAR MAHMOOD ....எனினும் உங்கள் எதிர்பார்புகளுக்கு நல்ல யோசனை சொன்ன நண்பருக்கு உங்கள் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியை தருகிறது. வாழ்த்துக்கள். . ...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross