கடமை! கன்னியம்.... தட்டுப்பாடு (?) posted byM.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.)[30 September 2012] IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22527
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. ஆமா! இவர் கடிதம் போட்டு என்னதை சாதிக்கப் போறாருன்னு? குறைவாக எடை போட்டு விட முடியாது. முசீபத்துகளை மொத்தா இழுத்துட்டு வந்துவிடும். ஏற்கனவே ஒரு பஸ்ஸுக்கு லாடம் கட்டியவர் தானே? தன் முயற்சியால் பல காரியங்களை மௌனமா சாதிச்சு சில மௌனப் புரட்சியே பண்ணியிருக்காங்க நம்ம பாலப்பா-ஜலாலி காக்கா.(எனக்கு ஒரு முறைலெ மச்சான் அவர்). பார்ப்போம்! என்னதான் நடக்கிறது என்று?
ஓர் வேண்டுகோள்...!
இப்படியே ஆளாளுக்கு நாங்க மாறி,மாறி கருத்துச் சொல்லி ஆகப் போறது ஒன்றுமில்லை! ஊர் மக்கள் நலன் கருதி உறுப்பினர்கள் மற்றும் தலைவி உட்காந்து பேசி ஓர் நல்ல முடிவை எடுக்க வேண்டும். யாருடைய சூழ்ச்சிக்கும் இடம் தராமல் தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு சிறிதேனும் நன்மை செய்யாத வரை அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டான். மகத்தான பொறுப்பை மக்கள் உங்களிடம் எந்த நம்பிக்கையில் ஒப்படைத்துள்ளனரோ? அதன் அவசியத்தை உணர்ந்து அம் மக்களுக்கு சென்றடையும் பயன்களை பெற்றுத் தர நீங்கள் பாடுபட வேண்டும். இதில் உறுப்பினர்களானாலும் சரி! தலைவியானாலும் சரி! கடமை உங்கள் அனைவர் மீதும் கடமையே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross