செய்தி: முதியோர் உட்பட அனைவரின் உற்சாகத் துள்ளளுடன் களை கட்டியது கே.சி.ஜி.சி.-யின் குடும்ப சங்கமம்! சென்னை காயலர்களின் துள்ளல் திருவிழா!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[30 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22534
"எங்க வீட்டு ராஜாவுக்கு இளமை திரும்புது, வயது ஏற ஏற இன்பம் சேர்ந்து காதல் அரும்புது" என்று ஒரு 60 வயது பெண் தன் கணவனின் இளமையில் மயங்கி பாட்டு பாடுவாள்.அது எவ்வளவு உணர்வு பூரணமானது என்பது இந்த நிகழ்ச்சியின் மூலம் தெரிகிறது. இப்படிதான் வாழ்க்கை இருக்க வேண்டும். ஆனால் நாம் எப்படி அமைத்துக்கொண்டோம். நாள் முழுவதும் வேலை. வீட்டுக்கு வந்து பார்த்தால் பிள்ளை தூங்கிவிடும். விடிந்து வேலைக்கு செல்லும்போதும் பிள்ளை தூங்கி கொண்டே இருக்கும். 50 வருடங்கள் ஓயாமல் உழைத்து பணம் சேர்த்துவிட்டு, சேர்த்த பணத்தை மீதி இருக்கும் வயதில் சுகமாக இருக்க வேண்டும் என நினைத்து மருத்துவமனைக்கு அள்ளிக்கொடுக்கிறோம்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று. குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே....இப்படி தமிழில் பல மொழிகள்..... பழ மொழிகள் உள்ளன. அதை இப்படி சேர்ந்து அனுபவித்தால்தான் தெரியும்.
அன்னை இடம் நீ அன்பை வாங்கலாம். தந்தை இடம் நீ அறிவை வாங்கலாம். இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம். பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம் என்று அந்த பிஞ்சு உள்ளங்களில் வாழ்க்கையின் தத்துவத்தை உள்வாங்க செய்ய வேண்டும்.அதற்கு இப்படிப்பட்ட நிகழ்சிகள் பயன்படும். நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கும் இப்படி வித்தியாசமாக சிந்திதவர்களுக்கும் கலந்து கொண்ட எல்லோருக்கும் எனது வாழ்த்துக்கள்.
"SMILE, IT COSTS NOTHING BUT CREATES MUCH. A SMILE WILL SPEAK MORE THAN THOUSAND WORDS.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross