அஹா! மிக மிக நல்லதோர் அருமையான திட்டம் செய்ய வேண்டியதும் உடனடி அவசியமானதுமான இந்த திட்டத்தை முறையோடு முறையான மஷூறாவோடு செயல் படுத்தினால் காயல்நல மன்றங்களினால் சமீப காலமாக செயல் படுத்திவரும் எல்லா திட்டங்களை விட இந்த ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் “ஷிஃபா”வுக்கு காவாலங்கா வின் திட்டம் அதிகமதிக பலனை தரும். என்பதில் சந்தேகமில்லை.. காரணம் சுவரை வைத்துத்தான் சித்திரம் வரைய வேண்டும். சுவர் என்பது நமது உடல்தானே .அதனை ஒழுங்கு படுத்துவது தான் முதல் வேலை. அதன் பின் வாழ்க்கை எனும் சித்திரம் அழகழாகவே அமையும். ”அத்துனயா ஸா அ- லைஸ ஃபீஹா றாஹ” என்ற நாயக வாக்கியங்களின் கருத்து . அதாவது இந்த பூ உலகம் கொஞ்ச நேரம்- அதில் நிம்மதி என்பது இல்லைதான்.என்ற கருத்தும் இருக்கிறது.
அல்லாஹ் காவாலங்கா அமைப்பாளர்களுக்கு முயற்சிக்கு தகுந்த நற்கூலியை அதிகமாக தந்து அதனை சார்ந்த இயக்கங்களுக்கும் பூரண வெற்றியை தந்தருள்வானாக. அதனால் நம் எல்லோருக்கும் நற்பலன்களை தந்தருள்வானாக. ஆமீன்.
ஒரு முக்கியமான விஷயம். (இஃகுலாஸான. ஸுன்னத்தான ) முறையான மஷூறாக்கள் செய்யப்படாத்ததினால் தான் நமதூர் வரலாறுகளில் ஏற்பட்ட ஜன நாயக சபை, மஹாஜன சபை போன்றது முதல் பல,பல சமூக அமைப்புக்கள் கிட்டத்தட்ட 75-80 வருடங்களில் சுமார் பத்துக்கு மேற்ப்பட்ட பெரிய அளவிலான பெரிய, பெரிய சமூக சேவை சங்கங்களும் ,சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட மஹல்லா வாரியான சிறு சிறு சங்கங்களும் ஏற்பட்டு கொஞ்ச காலம் நல்ல முறைகளில் செயல்பட்டும் தற்போதோ ஒன்றிரண்டைத் தவிர கணாமலே போய்விட்ட்து..
இதற்கெல்லாம் காரணம் 1952 -53ல் சன்மார்க்கத்தின் அளவில் ஒன்றிணைந்து செயல்பட்ட ஒரு சன்மார்க்க அமைப்பை உதாசீனம் செய்ததால் வந்ததன் விளைவு. நமதூருக்கு ஏற்ப்பட்ட மிகப்பெரிய (பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான.....) இழப்பு என்பதனை நம் மக்கள் அறிந்து செயல் படாத வரை எந்த இயக்கமும் நீண்ட நாள் வெற்றியாக அமையாது. இம்மை மறுமை முழு வெற்றியை காண்பதும் குதிரை கொம்புதான். இதன் விளக்கங்களை அல்லாஹ் எல்லோருக்கும் விளங்கச் செய்வானாக. ஆமீன். வஸ்ஸலாம்.
தகவல் தைக்கா றஹ்மத்துல்லாஹ், 59, தீவுத்தெரு, காயல்பட்டணம். ஃபோன் 280852=9488507221.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross