உலக காயல் நல மன்றத்தினரால் விவாதிக்கப்பட்டு வரும் - ஒருங்கிணைந்த மருத்துவ உதவித் திட்டம் “ஷிஃபா” வுக்கு இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா முழு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
08.10.2012 அன்று கொழும்பு புகாரீ அன் கோ இல்லத்தில் இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்காவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
மவ்லவீ ஹாஃபிழ் அப்துல்லாஹ் மக்கீ, எஸ்.ஷாஹுல் ஹமீத், எஸ்.எம்.பி.செய்யித் இஸ்மாஈல், எம்.என்.மக்கீ, பி.எம்.நஜ்முத்தீன், ஓ.எல்.எம்.ஆரிஃப், எஸ்.இ.புகாரீ, எஸ்.இ.அப்துல் காதிர், பி.எம்.ரஃபீக் ஆகியோர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், பின்வருமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:-
நமது காயல் மாநகர மக்களின் மருத்துவ தேவைகளைக் கருத்திற்கொண்டு, மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை மேற்கொள்ள அனைத்து காயல் நல மன்றங்களின் ஒத்துழைப்போடு இன்ஷா அல்லாஹ் ஒருங்கிணைந்து, மருத்துவ உதவிக்கான மையமாக உறவாக இருக்கும் "ஷிபா" அமைப்பிற்கு இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தனது முழு ஆதரவை வழங்கிடவும், நலிந்த மக்களின் துயர் துடைக்கும் இந்த அறப்பணியில் எமது மன்றம் பங்கேற்றுப் பணியாற்றிடவும் ஏகமனதாக இந்த செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறு, இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் செயலாளர் ஹாஜி பி.எம்.ரஃபீக் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார். |