வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்திடும் பணிக்கு 01.10.2012 முதல் 31.10.2012 வரை
மனுக்கள் - தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து சட்டமன்றத் தொகுதியின் வாக்குச் சாவடிகளிலும் பெறப்படுகின்றன.
வாக்காளர் பட்டியலில் புதிதாக தங்கள் பெயரை இணைக்க விரும்புபவர்கள் - அதற்குள்ள படிவமான படிவம் 6-இனை நிரப்பி - அதற்குரிய
அலுவலரிடம் சமர்ப்பிக்கவேண்டும். படிவத்தை நிரப்பி சமர்ப்பிக்க இயலாதோர், அதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள இணையதள வசதியை
பயன்படுத்தலாம்.
இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய - தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ள இணையதளம் - www.elections.tn.gov.in/eregistration - ஆகும்.
இந்த இணையதளத்தை பயன்படுத்த ஈமெயில் முகவரி கட்டாயம் அவசியம். தற்போது புகைப்படங்கள் இணைக்கப்பட்டே வாக்காளர்கள் அட்டை
விநியோகம் செய்யப்படுவதால் - இணையதளம் மூலமே, புகைப்படத்தை சமர்ப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் உள்ள படிவம் - தாளில் உள்ள படிவத்திற்கு சமமானது. ஈமெயில் முகவரி போன்ற சில கூடுதல் தகவல்களே இணையதளத்தில்
புதிதாக கோரப்படுகிறது. தகவல்களை பூர்த்திசெய்து சமர்ப்பித்தப்பின், ஊர்ஜிதம் செய்வதற்காக ஈமெயில் முகவரிக்கு, தகவல் அனுப்பப்படும். அதில்
விண்ணப்பம் பெறப்பட்டதற்கான பிரத்தியேக எண் (Tracking Number) இருக்கும். மேலும் - பதிவு செய்தவர், தான் பதிவு செய்த தகவலை ஊர்ஜிதம்
செய்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் மாற்றமும் செய்துகொள்ளலாம்.
இணையதளம் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் - வழமை போல் - அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, வாக்களர் பட்டியலில், சட்ட விதிகளுக்கு
உட்பட்டிருந்தால், இணைக்கப்படும். இணையதளம் மூலம் புகைப்படம் இணைக்கப்படாத விண்ணப்பங்களை நிராகரிக்கவேண்டாம் என்றும்,
புகைப்படத்தை இல்லங்களுக்கு சென்று சேகரித்துகொள்ளும்படி அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் - தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களின் விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை - பிரத்தியேக எண் கொண்டு - தெரிந்து கொள்ளலாம். இந்த படிவம் இந்தியாவில் வாழும்
தகுதியான வாக்காளர்களுக்கு மட்டுமே. இதனை வெளிநாடில் வாழும் இந்தியர்கள் (NRI) பயன்படுத்த கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |