11ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
காயல்பட்டினம் எல்.கே. மேனிலைப்பள்ளியில் 11.10.2012 அன்று (நேற்று) மாலை 04.30மணியளவில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி, தலைமையுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து, பள்ளியின் பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி ஏ.ஆர்.லுக்மான் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்னர், இப்பள்ளியின் 11ஆம் வகுப்பு பயிலும் 100 மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. பள்ளியின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.எம்.ஸதக்கத்துல்லாஹ் என்ற ஹாஜி காக்கா, பொதுக்குழு உறுப்பினர் ஹாஜி பி.எம்.எஸ்.ராஜி, ஹாஜி ஏ.ஆர்.லுக்மான், பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா, ஆசிரியர்கள் எம்.டேவிட் செல்லப்பா, எம்.ஏ.எஃப்.செய்யித் அஹ்மத், அஹ்மத் ஏ.ஜெ.முஸ்தஃபா, எஸ்.வேலாயுதம், ஜெ.அருமைராஜ் ஆகியோர் அவற்றை மாணவர்களுக்கு வழங்கினர்.
தகவல் & படங்கள்:
ஆசிரியர் S.B.B.புகாரீ |