தூத்துக்குடி மாவட்டம் துவங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ளி விழா கடந்த மார்ச் மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. வெள்ளி விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழா இம்மாம் 19, 20, 21 தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது.
நிறைவு விழா குறித்த கலந்தாலோசனைக் கூட்டம், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் அஷோக் குமார் உட்பட - மாவட்டத்தின் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். |