துல்ஹஜ் (1433) மாத அமாவாசை அக்டோபர் 15 திங்கட்கிழமை அன்று - இங்கிலாந்து நேரப்படி மதியம் 12:02 மணி அளவில் ஏற்படுகிறது.
அப்போது இந்திய நேரம் மாலை 5:32 மணி.
அக்டோபர் 15 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:01 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 5:52. அன்று காயல்பட்டணத்தில்
அமாவசை நிகழ்ந்து 20 நிமிடங்களில் சந்திரன் மறைகிறது. அன்று தென் பசிபிக் கடல் பகுதியின் ஓரத்தில் வெறுங்கண்கொண்டும், தொலைநோக்கிகள்
உதவிகொண்டும் பிறையை காணலாம்.
அக்டோபர் 16 அன்று காயல்பட்டணத்தில் சூரியன் மாலை 6:01 மணிக்கு மறைகிறது. சந்திரன் மறையும் நேரம் 6:46. சூரியன் மறையும்போது
சந்திரனின் வயது 24 மணி நேரம். சூரியன் மறைந்து வானில் 45 நிமிடம்வரை பிறை இருக்கும். வெறுங்கண்கள் கொண்டு எளிதாக பிறையை
காணலாம்.
மேலும் மேற்கு ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இலங்கை, தென் அரேபியா, மத்திய மற்றும் தென் ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய
அமெரிக்கா, வட அமெரிக்காவின் தென் மற்றும் மத்திய பகுதிகளில் வெறுங்கண்கள் கொண்டு எளிதாகவும், தென் கிழக்கு ஆசியா, மத்திய
இந்தியா, மத்திய கிழக்கு ஆசியா, வட ஆப்ரிக்காவின் அநேக பகுதிகள், அமெரிக்காவின் வட பகுதிகள் - வானிலை சூழல் தெளிவாக இருந்தால் -
வெறுங்கண்கள் கொண்டும், வட இந்தியா, மத்திய ஆசியாவின் இதர பகுதிகள், வட ஆப்ரிக்கா, ஐரோப்பாவின் தென் பகுதிகள், கனடாவின் தென்
பகுதிகள் ஆகியவற்றில் தொலைநோக்கிகள் உதவிக்கொண்டும் பிறையை காணலாம்.
பிறையை கணக்கிட்டு அறியலாம் என்ற நிலையில் உள்ளவர்க்கு (Hijra Committee, Kerala) அக்டோபர் 16 - துல்ஹஜ் 1 ஆகும். அவர்களுக்கு
அக்டோபர் 24 - அரபா தினம் மற்றும் அக்டோபர் 25 - ஹஜ் பெருநாள் தினம் ஆகும்.
உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதனை ஏற்று கொள்ளலாம் என்ற கொள்கையில் உள்ளவர்க்கு அக்டோபர் 15 (அமாவாசை) அன்று துல்கிதா
29 பூர்த்தி ஆகிறது. உலகில் அன்று தென் பசிபிக் கடல் பகுதியின் ஓரத்தில் வெறுங்கண்கொண்டும், தொலைநோக்கிகள் உதவிகொண்டும் பிறையை
காணலாம். அவை மக்கள் வாழும் பகுதிகள் இல்லாததால் - அங்கிருந்து பிறை கண்ணால் பார்க்கப்பட்ட தகவல் வர வாய்ப்புகள் குறைவு. ஆகவே -
அவர்கள் அக்டோபர் 16 அன்று துல்கிதா 30 பூர்த்தி செய்வர். அவர்களுக்கு - அக்டோபர் 17 - துல்ஹஜ் 1 ஆகும்; அக்டோபர் 25 - அரபா தினம்
மற்றும் அக்டோபர் 26 - ஹஜ் பெருநாள் தினம் ஆகும்.
அந்தந்த இடங்களில் பிறை காணப்பட வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்களுக்கு அக்டோபர் 15 (அமாவாசை) அன்று துல்கிதா 28 பூர்த்தி
ஆகிறது. அக்டோபர் 16 அன்று துல்கிதா 29 பூர்த்தி ஆகிறது. அக்டோபர் 16 அன்று காயல்பட்டண வானில் - 24 மணி நேர வயது பிறை - 45
நிமிடம்வரை இருக்கும். வெறுங்கண்கள் கொண்டு எளிதாக பிறையை காணலாம். அவ்வாறு பிறை காணப்பட்டால் - அவர்களுக்கு - அக்டோபர் 17 -
துல்ஹஜ் 1 ஆகும்; அக்டோபர் 25 - அரபா தினம் மற்றும் அக்டோபர் 26 - ஹஜ் பெருநாள் தினம் ஆகும். |