காயல்பட்டினத்தில் நேற்று முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நேற்றிரவு 10.50 மணியளவில் துவங்கிய மழை 11.10 மணியளவில் நின்றது. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 05.15 மணிக்கு மீண்டும் மழை பெய்யத் துவங்கி, தற்போது (காலை 09.20 மணி) வரை மழை பெய்துகொண்டிருக்கிறது. தொடர்மழை காரணமாக நகரின் அனைத்து தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
வடகிழக்குப் பருவமழை துவங்குவதை உணர்த்துவதாக இம்மழை பொழிவு அமைந்துள்ளது.
காயல் ரமணன், மண்ணின்மைந்தன் அளித்த வானிலை அறிக்கைக்கு நன்றி!! நீ ஊருக்கு போய்ட்டா இல்லே இனி வானம் மும்மாரி பொய்யும்????? சிங்கப்பூரில் வறண்ட வானும்.. காயலில் திரண்ட மேகமாகவும் உள்ளது உன் வருகையால்!!
நம் ஊரில் நல்ல மழை + நல்ல இதமான குளிர் காற்றும் கூடவாம்.தற்போது வெகேசனில் ஊர் போய் உள்ள நம் ஊர் மக்களுக்கு கொஞ்சம் மனநிம்மதி கிடைத்து இருக்கலாம்.
வெயிலின் கடுமையான தாக்கதில் இருந்தும் & புழுக்கதில் இருந்தும் ......மன நிம்மதி பெற்று இருப்பார்கள் அல்லவா .....
ரொம்பவும் ஒரு முக்கியமான விசையம் என்ன ...வென்றால் ....இன்று ( 15 / 10 / 12...Mon day ) காலை முதல் இரவு 7.00 மணிவரையில் பவர் கட்டே ஆகவில்லையாமே ....நம் ஊர் மக்கள் இன்று கொஞ்சம் ஆனந்த பட்டார்களாம்.......
அடடா ....சொல்ல மறந்து விட்டேன்.....இரவு 7.00 மணிக்கு மேல் பவர் கட்டாகியதாமே.....அட ....கடவுளே .....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross