திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வரும் - நடக்கவியலாத முதியோர் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக முதியோர் நாற்காலி (வீல் சேர்) தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, காயல்பட்டினத்தைச் சேர்ந்த கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தார் மற்றும் சமூக ஆர்வலர் எல்.எம்.இ.கைலானீ ஆகியோர், திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு தலா ஒரு முதியோர் நாற்காலியை, தொடர்வண்டி நிலைய அதிகாரி ஜெயக்குமாரிடம் நன்கொடையாக அளித்தனர்.
காயல்பட்டினத்தைச் சேர்ந்த எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், கல்ஃப் செய்யித் ஆகியோர் உடனிருந்தனர்.
1. பயன் அடைவோர் உள்ளத்தால் கேட்கும் நல் பிராத்தனைகளை வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக... ஆமின்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[16 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22833
திருச்செந்தூர் தொடர்வண்டி நிலையத்திற்கு வரும் நடக்கவியலாத முதியோர் மற்றும் நோயாளிகளின் வசதிக்காக முதியோர் நாற்காலி (வீல் சேர்) வழங்கிய கரூர் ட்ரேடர்ஸ் நிறுவனத்தார் மற்றும் சமூக ஆர்வலர் எல்.எம்.இ.கைலானீ ஆகியோர்களுக்கு இந்த வீல் சேரின் மூலம் பயணிக்கும் நடக்கவியலாத முதியோர் மற்றும் நோயாளிகள் அவர்கள் உள்ளத்தால் கேட்கும் நல் பிராத்தனைகளை வல்ல இறைவன் ஏற்று கொள்வானாக... ஆமின்..
மேலும் இவர்கள் செய்த இந்த நல் சேவைக்காக வல்ல இறைவன் இவர்களின் வியாபாரத்தில் அதிக பரக்கத்தையும்.. சரீர நலத்தையும் கொடுப்பானாக... ஆமின்..
நல்ல செய்தி தான்.... நடக்கவியலாத முதியோர் & நோயாளிகளின் மனதார '' துவா '' கரூர் நிறுவனத்தார் & சமூக ஆர்வலர் L.M.E.கைலானீ ..... அவர்களுக்கு உண்டு .
ஆமா இந்த இரண்டு வீல் சேரில் ஒன்றை நம் ஊர் தொடர்வண்டி நிலையத்திற்கு கொடுத்து இருக்கலாமே.
பொதுவாகவே நம் அருமை சகோதரர் MR. L.M.E.கைலானீ அவர்களுக்கு இந்த மாதிரி ( நம் ஊருக்காக ) பொது சேவை செய்வது புதியது அல்ல ......தாராள .....மனமும் ..நல்ல எண்ணமும் / குணமும் கொண்டவர் ...யாவரும் அறிந்ததே ........
நம் ஊர் மக்கள் யாவர்களும் ( உள் நாடு / வெளி நாடு / உள் ஊர் ) பொது நல சேவைகளை போட்டி போட்டு கொண்டு செய்வதை நாம் நினைக்கும் போது நம் மனதுக்கு சந்தோசமாகவே இருக்கிறது.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற காலங்களில் நம் ஊர் மக்களிடம் பரந்த மனப்பான்மை காணபடுவதுடன்.....நம் ஊரும் படு முன்னேற்றம் அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமே கிடையாது. வஸ்ஸலாம்
3. Re:... posted byLANDMARK RAVANNA ABULHASAN (dubai.)[17 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22847
நம் ஊர் ஸ்டேஷன் க்கும் கொடுக்கலாமே என்று mohamed லப்பை எழுதிஉள்ளார். இரண்டில் ஒண்டை கொடுப்பதற்கு பதில் வேறு யாராவது வில் ஷேர் கொடுக்கலாம்.
கிலானியும் கரூர் ட்ரடெர்ஸ் கொடுத்தது பாராட்ட தக்கது.
ஜனாப் கிலானி நல்ல ஸமோஹ் செவஹர்.ஊரின் நல்ல செயலுக்கு துணை நிற்பவர் என்பது யாவரும் அறிந்ததே.
நான் கூட நம்மூர் ஸ்டேஷன் இருட்டாஹா இருந்ததை பார்த்து ரயில்வே இல் பேசி சிக்ஸ் போகிஸ் லைட் வாங்கினேன். பிட்டிங்க்ஸ் எல்லாம் ரெடி செய்து ஏலேக்ட்ரிசியன் கூட stationil பொறுத்த செண்டபோது ரயில்வே தடுத்து விட்டார்கள். காரணம் நம்மூர் stationil பல போகிஸ் லைட் போட்டால் கரண்ட் செலவு ஏற்க வழி இல்லை என்று சொல்லி தடுத்து விட்டனர்.அந்த லைட் வாங்கியதால் எனக்கு 18000 ரூபா நஷ்டம்.வேறு எங்கும் பொது இடத்திற்கு தேவைப்பட்டால் anughinal donation பண்ண விரும்புகிரேன்.
4. Re:... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்)[17 October 2012] IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22868
மகிழ்வான செய்தி.
இந்த உதவியை செய்த சகோ. கைலானி அவர்களுக்கும் கரூர் டிரேடர்ஸ் நிறுவனத்தார் அவர்களுக்கும் பாராட்டுக்கள். வல்ல ரஹ்மான் உங்களுக்கு, உங்கள் வாழ்வில் இன்னும் அதிக அபிவிருத்தியை செய்வானாக.. உங்களின் உதவியை தொடருங்கள்.
** ஒரு காலத்தில் குப்பை காடாக கிடந்த "பிரின்ஸ் வீதியை"
(என்ன ஆச்சரியமாக படிக்கின்றீர்கள், இப்படி ஒரு தெரு உள்ளது என்று தெரியவில்லையா? , பழைய பெயர் "பீ குளத்து ரோடு " , மொகுதூம் பள்ளி மைய வாடி பின்புறம், குத்துக்கல் தெருவில் இருந்து புதுக்கடை தெரு செல்லும் பாதை... அப்பாடா.. புரிந்து விட்டதா!) ,
இன்று பள. பளப்பாக மாற்றி, குப்பைகள் அங்கு சேரா வண்ணம் கண்காணித்து, அங்கு திருமண விருந்துகள் நடைபெறும் அளவிற்கு கொண்டு வந்த பெருமை சகோ. கைலானிக்கு உண்டு. பாராட்டுக்கள்.
* கரூர் கரூர் டிரேடர்ஸ் நிறுவனத்தார் - அவர்கள் செய்யும் உதவிகள் வெளியில் தெரியாது. வலது கை செய்யும் உதவி இடது கையுக்கு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். ஆச்சரியப்படும் அளவு அவர்கள் உதவிகளை செய்து வருபவர்கள் என்பது பலரும் அறிந்தது. இந்த உதவி செய்தியில் வந்தது ஆச்சரியமே..!
* சகோ. ராவன்னா அபுல் ஹசன் ஹாஜி அவர்களே, தாங்கள் கூறியது,
" அதாவது உபயோகப்படாமல் போன லைட்கள் வகைக்காக 18 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு நஷ்டம் என்று ..""
கண்டிப்பாக நஷ்டம் இல்லை. வல்ல அல்லாஹ் அன்றே உங்களின் நன்மைகள் கணக்கில் வரவு வைத்து விட்டான். அதை மீண்டும் மக்களின் நன்மைக்கு கொடுக்கப்போகின்றீர்கள். ஆக உங்களுக்கு டபுள் நன்மைகள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross