எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதியன்று மன்றத்தின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டுவதென, ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செயற்குழுக் கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீயிலுள்ள காயலர்களை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் அபூதபீ காயல் நல மன்றத்தின் எட்டாவது செயற்குழு கூட்டம் 13.10.2012 சனிக்கிழமையன்று மாலையில், மன்றத்தின் பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ அவர்கள் தலைமையில் கூடியது. மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் மவ்லவீ ஹாஃபிழ் இஸ்ஹாக் லெப்பை மஹ்ழரீ அவர்கள் இறைமறை கிராத் ஓத கூட்டம் துவங்கியது.
நவ.16இல் இரண்டாவது பொதுக்குழு:
இன்ஷா அல்லாஹ் நவம்பர் மாதம் 16ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று சிறப்பான முறையில் மன்றத்தின் இரண்டாவது பொதுக்குழுவைக் கூட்ட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. மேலும் அப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாட்டுப் பணிகளுக்குரிய பொறுப்புகள் மன்றத்தின் செயற்க்குழுவினரிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது.
மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ்.ஏ. ஹபீப் முஹம்மத் அவர்கள் பொதுகுழு கமிட்டியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார்கள். நிகழ்விடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்த விரிவான தகவல்கள், விரைவில் தனிச்செய்தியாக தரப்படும்.
பொதுக்குழுவின் ஏற்பாடுகள் இறுதி வடிவம் பெற இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் செயற்குழுவைக் கூட்டுமாறு மன்றத்தின் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் ஹபீபுர் ரஹ்மான் மஹ்ழரீ கேட்டுக்கொண்டார். இறுதியாக மவ்லவீ ஹாஃபிழ் ஹுஸைன் மக்கீ மஹ்ழரீ துஆ மற்றும் கஃப்பாராவுடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
இவ்வாறு, அபூதபீ காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
M.E. முகியதீன் அப்துல் காதிர்,
செய்தி துறை பொறுப்பாளர்,
காயல் நல மன்றம்,
அபூதபீ. |