காயல்பட்டினத்தில் கடந்த பல மாதங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், 13.10.2012 அன்று (நேற்று) நள்ளிரவு 02.00 மணியளவில் இதமான மழை துவக்கமாகப் பெய்தது. அதனைத் தொடர்ந்து, வெப்பத்தின் தாக்கம் தனிந்து, நகரில் இதமான வானிலையே நிலவி வந்தது.
இந்நிலையில், இன்று காலை 06.00 மணியளவில் மீண்டும் இதமழை பெய்தது. இம்மழை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. தற்போது நகரில் வெயில் அடிக்கும் நிலையிலும், இதமான வானிலையே நிலவி வருகிறது. |