காயல்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 14.10.2012 ஞாயிற்றுக்கிழமையன்று இரவு 10.50 மணி முதல் 11.10 மணி வரை மழை பெய்தது. பின்னர், 15.10.2012 திங்கட்கிழமையன்று (நேற்று) அதிகாலை 05.15 மணிக்குத் துவங்கி, காலை 10.45 மணி வரை மழை பெய்தது. இம்மழை காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, காயல்பட்டினம் பேருந்து நிலைய வளாகத்திலுள்ள நகராட்சிக்குச் சொந்தமான வணிக வளாகத்தின் பின்சுவர்களில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் - பெய்த மழை காரணமாக நனைந்திருந்தன. மைதா மாவு பசை கொண்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் என்பதால் அதன் வாசனை - அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆடுகளை ஈர்க்க, உடனடியாக சுவற்றின் மீது ஏறி நின்று அவற்றை சாப்பிடத் துவங்கின.
சில மணித்துளிகளில் அச்சுவர் - சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்ததற்கான சுவடே தெரியாமல் ஆக்கப்பட்டது.
சுவரொட்டியை ஆடுகள் ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததை அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தனர்.
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய் |