தூத்துக்குடி மாவட்டம் உருவாக்கப்பட்டு 25 ஆண்டுகள் பூர்த்தியானதையொட்டி வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றுவருகின்றன. இந்த விழாக்கள் அக்டோபர் 21 அன்று நிறைவுபெறுகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்புகளின் தொகுப்பு வருமாறு:
தூத்துக்குடி மாவட்ட வெள்ளிவிழா கொண்டாடத்தை முன்னிட்டு, முத்து விழா நிகழ்ச்சிகள் 19.10.2012, 20.10.2012 மற்றும் 21.10.2012 ஆகிய மூன்று நாட்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ளது.
19.10.2012 வெள்ளிக்கிழமை அன்று மகளிர் திருவிழா நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்ட மகளிருக்காக நடைபெறும் மகளிர் திருவிழாவில் மகளிர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக காய்கறி அலங்காரம், ரங்கோலி, சிகை அலங்காரம், ஒரு நிமிடம் மட்டும் (JAM), அடுப்பில்லா சமையல், வீணாகும் பொருட்களிலிருந்து கலைப் பொருட்கள் உருவாக்குதல், மெஹெந்தி போடுதல், நடனம், நவராத்திரி பொம்மை அலங்காரம் மற்றும் வாழ்த்து அட்டை தயாரித்தல் ஆகிய போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேற்கண்ட போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் கைப்பேசி எண் 89030 29251 - ல் தொடர்பு கொண்டு பதிவு செய்திட வேண்டும் அல்லது என்ற thoothukudisilverjubilee.mt@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
20.10.2012 சனிக்கிழமை அன்று தனிநபர் திறமைகளை வெளிபடுத்தும் விதமாக பாட்டு, மிமிகிரி, மேஜிக், நையாண்டி, வித்தை, நாட்டுப்புற பாட்டு மற்றும் கூத்து போன்ற வகையான போட்டிகள் நடைபெறவுள்ளன.
மேற்கண்ட போட்டிகளில் (Talent Show) கலந்து கொள்ளும் நபர்கள் தங்களின் தனித்திறமையை 1 அல்லது 1.5 நிமிடத்திற்குள் வெளிபடுத்த வேண்டும்.
மேற்கண்ட போட்டிகளில் கலந்துக்கொள்ள விரும்புவோர் தங்களது பெயரினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் கைப்பேசி எண் 94433 56015 - ல் தொடர்பு கொண்டு பதிவு செய்திட வேண்டும் அல்லது thoothukudisilverjubilee.mt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
21.10.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று புராதானப் பொருட்கள் கண்காட்சி (Antique Items Display) நடைபெறவுள்ளது.
மேற்கண்ட கண்காட்சியில் (Antique Items Display) தங்களிடம் உள்ள புராதானப் பொருட்களை வைப்பதற்கு விருப்பமுள்ள நபர்கள் வரவேற்க்கப்படுகிறார்கள்.
மேற்கண்ட கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களிடம் உள்ள புராதானப் பொருட்களின் விபரத்தை புகைப்படத்துடன் ஒருங்கிணைப்பாளரின் கைப்பேசி எண் 94431 21963 - ல் அல்லது thoothukudisilverjubilee.mt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
கண்காட்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் புராதானப் பொருட்களின் விபரம் 18.10.2012 அன்று உறுதி செய்யப்படும்.
19.10.2012, 20.10.2012, 21.10.2012, ஆகிய தினங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ஆசிஷ் குமார் IAS தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அவ்வறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |