கட்டுமானத் தொழில் சார்ந்த நவீன தகவல்களை உள்ளடக்கி வெளியிடப்படும் “கட்டுமானத் தொழில்” இதழி்ன் சார்பில், தமிழகத்தின் சிறந்த கட்டுமானத் தொழில் நிறுவனங்களைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டது.
“கட்டுமானத் தொழில் நிறுவன விருது 2012” என்ற தலைப்பில், சென்னை மியூசிக் அகடமி கேளரங்கில், கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ரோசய்யா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறந்த கட்டுமானத் தொழில் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினார்.
அந்த வரிசையில், காயல்பட்டினத்தைச் சேர்ந்தவர்களால் இணைந்து நடத்தப்படும் ராம்கி வாவு டெவலப்பர்ஸ் ப்ரைவேட் லிமிட்டெட் நிறுவனமும் விருது பெற தேர்வானது. அந்நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர்களுள் ஒருவரான ஹாஜி வாவு எஸ்.ஏ.ஆர்.ஹபீபுல்லாஹ், தமிழக ஆளுநர் ரோசய்யாவிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
தகவல் & படங்கள்:
M.B.S.அபூபக்கர் |