பாபநாசம் அணை அருகே பலத்த மழை பெய்துள்ளது. பெய்த மழையின் அளவு 34 மி.மி. என பதிவாகியுள்ளது. தமிழகத்தின் முக்கிய மழை காலமான வட கிழக்கு பருவ மழை - பொதுவாக அக்டோபர் 20 க்கு மேல் துவங்கும்.
காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (அக்டோபர் 9) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள்
வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 39.65 அடி (39.80 அடி) நீர்வரத்து (Inflow): 225 Cusecs (104 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 305 Cusecs (305 Cusecs) மழையின் அளவு - 34 mm
1. Re:... posted byMauroof (Dubai)[09 October 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22711
எல்லாப் புகழும் இறைவனுக்கே!. பாபநாசம் அணையின் தற்போதைய நீர்மட்டம், நீர் வரத்து, வெளியேற்றப்படும் நீரின் அளவு மற்றும் மழை குறித்த தகவல்களை kayalpatnam.com தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருவதை பெரும்பாலான நாட்கள் அவதானித்து வருபவர்களில் ஒருவனாக இருக்கும் எனக்கு இந்த அருள் மழை குறித்த செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இறைவா! நீ கொடுக்க நாடியதை எவராலும் தடுக்க முடியாது, நீ தடுக்க நாடியதை யாராலும் கொடுத்து விட முடியாது. நீ கொடுத்த அருளை வைத்துக்கொண்டே பலர் அதன் உண்மையான தாட்பரியம் அறியாமல் செயல்படுகின்ற விதம் வேதனைக்குரியது. அவ்வாறு செயல்படுபவர்களுக்கு உன்னுடைய மகிமையை விளங்கிடச் செய்வாயாக.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross