காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் இம்மாதம் முதல் புதிதாக மகப்பேறு மருத்துவ நிபுணர் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து, மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள பிரசுரம் பின்வருமாறு:-
1. Re:... posted bySHAIK ABBAS FAISAL .D. (kayalpatnam)[08 October 2012] IP: 116.*.*.* India | Comment Reference Number: 22698
நமது கே எம் டி மருத்துவமணை யில் நிலையான மகப்பேறு மருத்துவர் இல்லாமல் பல சிரமங்கள் பலருக்கு இருந்து வந்தது.
தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் மகப்பேறு மருத்துவரால் பலர் பயன் அடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[08 October 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22700
அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல செய்திதான். நம் ஊர் பொது மக்கள் D.G.O .DR அம்மாவை அவர்களை பயன் படுத்தி கொண்டு....வெளி ஊர் எல்லாம் போவதை தவிர்த்து.... நம் ஊர் மக்களுக்காகவே ஆரபிக்கபட்ட நம் K.M.T. யை பயன் படுத்துவது தான் நன்று .....
நம் K.M.T. நிர்வாகத்தினர்களுக்கு எங்களின் தாழ்வான ஒரு வேண்டு கோள்.. நிரந்தரமாக ஒரு ( 9.00 A.M. TO 1.00.P.M. & 4.30.P.M. TO 9.00 P.M ) M.D.DR ஒருவரையும் நியமனம் செய்தால் நம் K.M.T. மேலும் நல்ல ஒரு முன்னேற்றம் அடையும்.M.D. DR. இல்லாமல் நம் ஊர் பொது மக்கள் ரொம்பவுமே கஷ்டபடுகிறார்கள்.
இந்த ஒரு நல்ல செய்திக்காக நாங்கள் யாவர்களும் காத்து உள்ளோம். வஸ்ஸலாம்
3. கக்கத்துலெ புள்ளையெ வச்சுகிட்டு ஊரெல்லாம் தேடின கதை தான்....நம் கதை! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[08 October 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22704
நமது KMT மருத்துவமனையைப் பொருத்தவரை நிரந்தரமாக மகப்பேறு மருத்துவர் யாரும் இருந்ததில்லை! ஆத்திர அவசரத்துக்கு டாக்டர்கள் இருப்பதில்லை! அப்படியே போனாலும் நெல்லை, மதுரை, சென்னைக்கு கொண்டு போங்கன்னு எழுதி தந்துவிடுவார்கள். இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகள் பொதுவாக நமதூர் மக்களிடம் இருந்து வருகின்றது.
இம்மருத்துவமனையின் திறப்பு விழாவில் பேசிய கீழக்கரை பெண் மருத்துவர் ஒருவர் கூறிய வார்த்தைகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது, “உள்ளூர் மக்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாத காரணத்தால் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் உருவாக்கிய மருத்துவமனையில் இன்று ஈ விரட்டிக் கொண்டிருக்கின்றோம். தயவு செய்து காயல் மக்கள் இது உங்கள் சொத்து எனவே முழுமையான ஆதரவு கொடுத்து இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்று.
கையில் வெண்னெய்யை வைத்துக் கொண்டு நாம் நெய்யைத் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். நமதூர் கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு சூழல், நல்ல காற்று, தரமான மருத்துவம், தயவு, ஏழைகளுக்கு இலவசம் மற்றும் சலுகைகள், சங்கை மிக்க பெரியோர்களால் வழி நடத்தப்பட்டு, பாதுகாப்பான சூழல், சொந்த வீட்டைப் போன்று தங்கு தடைகள் இன்றி தாராளமாமாக போய் வர அனுமதி, சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருந்த போதிலும் ஊர்ருக்கு உழைப்பேன் என தம் வாழ்நாட்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் மிகச் சிறந்த குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர்-இஸ்மாயீல், பாஸி ஹாஜியார், உவைஸ் ஹாஜியார், லுக்மான் ஹாஜியார், வாவு முல்தஸீம், இன்னும் எத்தனையோ பல கன்னியமிக்க பெரியோர்களின் உடல் உழைப்பும், சேவைகளும் நம் மக்களுக்கு கிடைத்துவருவதை யாராலும் மறுக்க முடியாது. எந்த ஊர் வாசிகளுக்கும் இப்படி ஒரு வாய்ப்பு எங்கும் அமைந்ததில்லை!
ஊர் நன்மைக்காக நமது பணத்தில் துவங்கிய ஒரு மருத்துவக் கல்லூரிக்கு இணையான நம் KMT யை மட்டும் தொட்டுகொள் துடைத்துகொள் என்ற நிலையில் தான் பயன்படுத்தி வருகின்றோம். நமது ஆதரவு மற்றும் ஒத்துழைப்பு மட்டும் இம் மருத்துவமனைக்கு முழுமையாகக் கிடைத்து விட்டால் மாவட்டத்திலேயே இதுவே முதல் தர மருத்துவமனையாக விளங்கும் என்பதில் சந்தேகமில்லை!
மாற்றான் தோட்டத்து மல்லிகை தான் மணக்கும் என்பது நம் மக்களின் தலையெழுத்து! இதை யாரால் மாற்ற இயலும்...?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross